‘பிரபல செயலியைப் பயன்படுத்தும்போது’.. ‘தானாக இயங்கிய செல்ஃபோன் கேமரா’.. ‘அதிர்ச்சியில் பயனாளர்கள்’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்தும்போது செல்ஃபோன் கேமரா தானாக இயங்கியதால் பயனாளர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலிகளில் ஒன்றாக உள்ளது ஃபேஸ்புக். இந்நிலையில் சமீபத்தில் ஐஃபோன் உபயோகிக்கும் பயனாளர்கள் சிலர் ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்தும்போது, அவர்களுடைய செல்ஃபோன் கேமரா தானாக இயங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயனாளர்கள் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பயனாளர்களின் புகாரை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் அதற்கு அளித்துள்ள விளக்கத்தில், “இந்த பிரச்சனையை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இது ஃபேஸ்புக் வெர்சன் 246ல் தவறுதலாக இருந்த பக் (Bug) காரணமாகவே ஏற்பட்டுள்ளது. ஐஃபோன் பயனாளர்களை மட்டுமே பாதித்த இதற்கான தீர்வு தற்போதைய புதிய iOSக்கான ஃபேஸ்புக் வெர்சனில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பக் காரணமாக கேமரா ப்ரிவியூ மோடில் மட்டுமே இயங்கியதால் ஃபோட்டோ, வீடியோ எதுவும் அப்லோட் செய்யப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

FACEBOOK, WHATSAPP, INSTAGRAM, IPHONE, CAMERA, USERS, BUG, FIX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்