‘ஹைட்’ பண்ணினாலும் ‘பார்க்க’ முடியும்... ஒப்புக்கொண்ட ‘பிரபல’ நிறுவனம்... ‘அதிர்ச்சியில்’ பயனாளர்கள்...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

தங்களுடைய இருப்பிடத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளாத பயனாளர்களுடைய இருப்பிடத்தையும் தங்களால் தெரிந்துகொள்ள முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் பயனாளர் தன்னுடைய இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை என்றால் அதை ஹைட் செய்துகொள்ளும் வசதி உள்ளது. இந்நிலையில் அமெரிக்க செனட்டர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அனுப்பியுள்ள விளக்கக் கடிதம் ஒன்றில், “பயனாளர்கள் தங்களுடைய இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தாலும், எங்களால் அவர்களுடைய இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அதில், பயனாளர்களின் இருப்பிடம் குறித்த விவரத்தை வைத்து அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் வணிக நிறுவனங்கள் குறித்த தகவல்களை அவர்களுடன் பகிர முடிவதாகக் கூறப்பட்டுள்ளது. பயனாளர் தன் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தாலும், நண்பர்களாக் டேக் செய்யப்படுவது, ஃபேஸ்புக்கின் ஷாப்பிங் பிரிவு மூலம் பயனாளர் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது கொடுக்கும் முகவரி மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றை வைத்து அவருடைய இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடிவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி ஃபேஸ்புக் பயனாளர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்