"சப்பாத்தி உருட்டுவது போல் உருட்டலாம்..." "கர்ச்சீப்பை போல் மடித்து பாக்கெட்டுக்குள் வைக்கலாம்..." "வேறொன்றும் இல்லை... நெக்ஸ்ட் ஜெனரேஷன் செல்ஃபோன்தான்..."
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நமக்குத் தேவையான வடிவில் செல்போனை மாற்றிக் கொள்ளும் வகையில் ஃபிளெக்சிபிள் செல்போனை டிசிஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் செல்ஃபோன் உற்பத்தியில் பல சாதனைகள் படைத்து வரும் டிசிஎல் நிறுவனம், இந்த வித செல்ஃபோனை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன் ஒன்றை மூன்றாய் மடிக்கும் வடிவமைப்புக்கான காப்புரிமையை ஜியோமி நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால், அதற்கெல்லாம் போட்டியாக டிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஸ்மார்ட்போன், சாதாரண 6 இன்ச் ஸ்மார்ட்போன் தோற்றத்திலிருந்து 10 இன்ச் ஸ்மார்ட்போன் ஆக விரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே போனை இரண்டு, மூன்றாக மடிக்கலாம். சப்பாத்தியைச் சுருட்டுவது போலவும் சுருட்டலாம். இந்த மாடலை உலக அளவில் அறிமுகம் செய்துள்ளதில் முன்னோடி ஆகியுள்ளது டிசிஎல் நிறுவனம். செல்போனில் பெரிய திரை வேண்டும் என விருப்பப்படுபவர்களுக்கு இந்த செல்போன் ஒரு வரப்பிரசாதமாகும். நாம் எடுத்துச் செல்லும் போது பழைய வடிவில் 6 இன்ச் செல்போனாகவே எடுத்துச் செல்லலாம், ஆனால் தேவையான பொழுது அதனை 10 இன்ச் வடிவில் பெரிதாக்கிக் கொள்ளலாம். இந்த வசதி வாடிக்கையாளர்களை கவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்