"இதுக்கு அப்புறமும் பாம்புக்கு கால் இல்லன்னு சொல்லுவீங்க?!" அடடே போட வைத்த கண்டுபிடிப்பு.. மிரள வைத்த 'வாலிபர்'!!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் ஏராளாமான கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

Advertising
>
Advertising

Also Read | ரத்தன் டாடாவே முதலீடு செய்த 'Start up' நிறுவனம்.. "இந்தியாலயே இதான் முதல் தடவ.." சபாஷ் போட வைத்த உதவியாளர்!!

அது மட்டுமில்லாமல், மனிதனின் வேலையை சுலபமாக்கும் வழிகளில், மனிதர்கள் பலரும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு நிறைய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் நாளுக்கு நாள் நடந்த வண்ணம் உள்ளது.

இதில், சில விஷயங்கள் நம்மை கடும் வியப்பில் ஆழ்த்தி, இப்படி கூட யோசிக்க முடியுமா என்று கூட தோன்ற வைக்கும்.

அப்படி ஒரு யூடியூபரின் கண்டுபிடிப்பு ஒன்று தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் வெளியாகி, பலரையும் அடடே போட வைத்துள்ளது. பொதுவாக, பாம்புகளுக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கால்கள் இருந்ததாகவும், அதன் பின்னர் அவை இல்லாமல் போனதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. இது தொடர்பாக, பிரபல யூடியூபர் மற்றும் என்ஜினியரான Allen Pan என்பவர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, கருவில் இருக்கும் போது, பாம்புகளுக்கு கால்கள் இருப்பதாகவும், அதன் பின்னர் அவை இனப்பெருக்க உறுப்புகளாக மாறுவதாகவும் ஆலன் கண்டுபிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மிகவும் வினோதமான ஒரு யோசனை, ஆலனுக்கு தோன்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பாம்புகளுக்கு ரோபோடிக் கால்களை உருவாக்கவும் ஆலன் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இதற்கான முயற்சிகளில் அவர் இறங்கிய நிலையில், பல்வேறு ஆய்வுகள் மற்றும் பாம்பு எப்படி ஊர்ந்து செல்லும் போன்ற பல விஷயங்களை மிக உன்னிப்பாக கவனித்து தெரிந்து கொண்டுள்ளார். அப்படி அனைத்தும் தெரிந்து கொண்ட ஆலன், பாம்பின் அசைவுக்கேற்ப டியூப் ஒன்றை தயாரித்துள்ளார். இதற்கு நான்கு கால்களும், ரோபோடிக் முறையில் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த டியூப்பிற்குள், பாம்பு நுழைந்த படி, அது இயக்கப்படும் வீடியோ ஒன்றையும் ஆலன் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். லேப்டாப் மூலம் ரிமோட் சென்சார் கொண்டு இந்த கால்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆலன் வெளியிட்டுள்ள வீடியோவில், பாம்பு ஒன்று டியூப்பிற்குள் நுழையவே, மெல்ல மெல்ல அந்த ரோபோடிக் கால்கள் நகர்ந்து செல்கிறது. இதனை பார்க்கும் போது, பாம்பே நடந்து செல்வது போன்ற உணர்வை தருகிறது. இதுகுறித்து பேசும் ஆலன், "நான் உண்மையில் பாம்புகளை நினைத்து மிகவும் வருந்துகிறேன். அவர்கள் கால்களை இழந்த பிறகும் யாரும் அதனை கண்டுபிடிக்க, என்னை தவிர வேறு யாரும் முயற்சி செய்யவில்லை" என தெரிவித்துள்ளார்.

பாம்புகளுக்காக அவர் கண்டுபிடித்துள்ள ரோபோடிக் கால்கள் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

Also Read | "டெய்லி ரூ.10 லட்சம் வர லாபம் பார்க்கலாம்.." குடும்பமாக போட்ட பகீர் பிளான்.. திடுக்கிட வைக்கும் மோசடி!!

ENGINEER, LEGS, SNAKE, ROBOTIC LEGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்