எலன் மஸ்க் நிறுவனத்தின் முதல் சேவைக்கே முற்றுப்புள்ளி வைத்த இந்தியா... காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

எலன் மஸ்க் நிறுவனமான SpaceX இந்தியாவில் அதிவேக ப்ராட்பேண்ட் சேவையைக் கொடுப்பதற்கான ஆயத்த வேளைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertising
>
Advertising

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் ஆகத் திகழ்பவர் எலன் மஸ்க். இவர் தனது SpaceX நிறுவனம் மூலம் பல தொழில்நுட்ப ரீதியிலான மைல்கல்களை எட்டி வருகிறார். இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் சேவை மூலம் அதிவேக ப்ராட்பேண்ட் வழங்குவதற்கான ஆயத்த வேளைகளை சமீப காலமாக எலன் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் தான் தற்போது SpaceX  நிறுவனத்துக்கு ஸ்டார்லிங்க் சேவைக்கான ப்ரீ ஆர்டர் சேவையை அளிக்கவும் ப்ரீ ஆர்டர் பெறவும் தடை விதிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவில் SpaceX நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவைக்கு இதுவரையில் உரிமம் அளிக்கவில்லை. இதனால், இந்திய மக்கள் இந்தச் சேவையை பெறுவதற்கு முன் பதிவு செய்ய வேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், மத்திய அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு SpaceX ஸ்டார்லிங்க் சேவைக்காக ஏற்கெனவே முன் பதிவு செய்து ஒருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எலன் மஸ்க் நிறுவனத்தின் இந்தச் சேவையைப் பெறுவதற்காக 99 டாலர்கள் முன்பதிவுக் கட்டணம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. SpaceX நிறுவனத்துக்கு இன்னும் லைசென்ஸ் கொடுக்கப்படவில்லை.

இந்திய அரசால் உரிமம் பெறாத நிறுவனம் எப்படி அதன் சேவைக்கான முன்பதிவை அறிவித்து விளம்பரப்படுத்தலாம் என மத்திய அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. SpaceX நிறுவனம் இந்திய அரசு அறிவித்துள்ள விதிகளைக் கடைபிடித்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் உரிமம் வழங்கப்படும். அதுவரையில் முன்பதிவு போன்ற சேவைகள் எதையும் அறிவித்து வழங்க வேண்டும் என மத்திய அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TECHIE, ELON MUSK, SPACEX, STARLINK SERVICES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்