‘ரூ. 1.47 லட்சம் கோடி அபராதம்’!.. ‘பணத்தை நைட்டு 12 மணிக்குள்ள கட்டணும்’.. பிரபல நிறுவனங்களுக்கு ‘செக்’ வைத்த மத்திய அரசு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஒரு லட்சத்து 47 ஆயிரம் அபராதத் தொகையை நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

சமீபத்தில் புதிய வருவாய் பங்கீட்டு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.92,642 கோடி செலுத்த வேண்டும். இதேபோல் அலைக்கற்றை பயன்பாடு மற்றும் உரிமை உள்ளிட்டவைகளுக்கு ரூ.55,054 கோடி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டி உள்ளன. இந்த தொகையை உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, உத்தரவு பிறப்பித்தும் பணம் செலுத்ததாக தொலைத்தொடர்பு நிறுவனங்களை நீதிபதிகள் கடுமையான சாடினர். இதனை அடுத்து நாட்டின் மூன்று பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொத்தமாக செலுத்த வேண்டிய அபராதத் தொகை ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை நேற்று நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.

இதில் ஏர்டெல் ரூ. 35,500 கோடியும், வோடஃபோன் ரூ. 53,000 கோடியும் நேற்று நள்ளிரவு 11.59 மணிக்குள் செலுத்த கெடு விதிக்கப்பட்டது. இதனை அடுத்து வரும் பிப்ரவரி 20ம் தேதி ரூ. 10,000 கோடி செலுத்துவதாகவும், மீதி பணத்தை அடுத்த வழக்கின் விசாரணைக்குள் செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வோடஃபோன் நிறுவனம் இதுகுறித்து மத்திய அரசுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

JIO, AIRTEL, VODAFONE, AGR, DOT, IDEA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்