உங்க Whats App-ல..'GIF' மெசேஜ் ஓபன் பண்ணாதீங்க.. பாதுகாப்பு எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நமது அன்றாட பயன்பாட்டில் இரண்டற கலந்துவிட்ட வாட்ஸ்அப் அடிக்கடி பல விஷயங்களை அப்டேட் செய்து தன்னை புதுப்பித்து வருகிறது.எனினும் வாட்ஸ்அப்பில் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு ஓட்டை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஓட்டையின் வழியாக உங்கள் தகவல்கள்,புகைப்படங்கள் ஆகியவற்றை ஹேக்கர்களால் திருட முடியும்.அதாவது பாதிப்படைந்த GIF பைல்களை உங்களுக்கு அனுப்புவதின் மூலம் உங்கள் மெசேஜ்கள், தகவல்களை ஹேக்கர்களால் ஹேக் செய்ய முடியும்.இதனால் தெரியாத நபர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் GIF மெசேஜ்களை ஓபன் செய்ய வேண்டாம்.
'Double Free Vulnerability' என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்விலிருந்து இந்த பாதுகாப்பு ஓட்டை உருவாகிறது. இதன் வழியாக உங்களின் வாட்ஸ்அப்பை க்ராஷ் செய்யவும் முடியும் அல்லது ஹேக்கருக்கான அணுகலை வழங்கவும் முடியும்.
தடுப்பு முறைகள்
உங்களுக்கு வரும் GIF பைல்களை நீங்கள் திறந்தால் மட்டுமே உங்கள் வாட்ஸ் அப்பை ஹேக் செய்ய முடியும்.நீங்கள் ஓபன் செய்யாத பட்சத்தில் உங்களது தகவல்களை திருட முடியாது.மேலும் நீங்கள் எந்த வெர்ஷனை பயன்படுத்தினாலும் உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொண்டால் இந்த பிரச்சினை இருக்காது.
அப்டேட்
உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யாத பட்சத்தில் உங்களுக்கு வரும் எந்தவொரு GIF பைலையும் ஓபன் செய்யவோ,மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்ட்ராய்டு
வாட்ஸ்அப் வெர்ஷன் 2.19.230 வரை நன்றாக வேலை செய்கிறது. ஆண்ட்ராய்டு 8.1 மற்றும் 9.0 இயங்குதளங்களில் நன்றாக வேலை செய்கிறது, ஆனால் ஆண்ட்ராய்டு 8.0 மற்றும் அதற்கு கீழே உள்ள ஓஎஸ்களில் வேலை செய்யவில்லை. ஆக பழைய Android பதிப்புகளில், double-free ஆனது இன்னுமும் தூண்டப்படலாம்.எனினும் நீங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து விட்டால் உங்களுக்கு இந்த பாதிப்புகள் இருக்காது.
விளக்கம்
இதுதொடர்பாக வாட்ஸ்அப் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,''இந்த பாதிப்பு கடந்த மாதம் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு விட்டது. இது எங்களது பாதித்தது என்று நம்புவதற்கு எங்களிடம் எந்த காரணமும் இல்லை. நாங்கள் எப்போதும் எங்கள் பயனாளர்களுக்கு சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்" என தெரிவித்து உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த போன்களில் இனி 'வாட்ஸ்அப்' எடுக்காது..செம 'ஷாக்' கொடுத்த வாட்ஸ்அப்!
- தவறுதலாக 'ஷேர்' ஆன உல்லாச வீடியோ..ஆசிரியர்-ஆசிரியை சஸ்பெண்டு!
- ‘இனி இது ரொம்ப ஈஸி’.. ‘வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- உங்க 'பேஸ்புக்'க ஓபன் பண்ணாமலேயே 'ஸ்டோரி' வைக்கலாம்..எப்படி தெரியுமா?
- ‘எல்லாமே சந்தோஷமாத்தான் போச்சு’... ‘கணவரிடமிருந்து வந்த வாய்ஸ் மெசேஜ்’... 'அதிர்ந்துப்போன மனைவி’!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘சாதி மாறி காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. ‘அரை நிர்வாணமாக்கி’.. ‘உறவினர்கள் ஒன்றுகூடி செய்த கொடூரம்’..
- ‘என் மனைவி பிரிஞ்சி போயிட்டாங்க’... ‘அதனால, விபரீத முடிவு எடுத்து’... ‘வீடியோவாக வாட்ஸ்-அப் அனுப்பிய இளைஞர்’!
- ‘வாட்ஸ்அப்பில்’ புதிதாக வரவுள்ள ஆப்பிளின் ‘ஃபன் ஃபீட்சர்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- ‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’