10 வெப்சைட்களை ஹேக் பண்ணிட்டாங்க! கண்டிப்பா இது அவங்களோட வேலை தான்.. உக்ரைன் அரசுத் தகவல்

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உக்ரைன்: உக்ரைன் நாட்டில் வங்கிகளின் இணையதளங்கள் மற்றும்  பாதுகாப்புத்துறை இணையதளங்கள் சைபர் தாக்குதலில் மாட்டியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

விமானத்துக்குள்ள ஆவி இருக்கா? யாருங்க என்கிட்ட 'க்ரீன் டீ' கேட்டது? மண்டையை பிச்சிக்கும் விமானப் பணிப்பெண்

உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இது ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடாகவும், உலகின் 46-வது பெரிய நாடாகவும் உள்ளது. அதோடு, கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா - உக்ரைன் எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளும் என அச்சம்:

உக்ரைன் எல்லையில் சுமார் 1,30,000 வீரர்களைக் குவித்திருக்கிறது ரஷ்யா.எல்லையில் இருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதனடிப்படையில் பார்த்தால் எந்த நேரமும் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளும் என உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை:

பதற்றத்தை தணிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் தொடர்ந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதனால், தன் பிடிவாதத்தில் இருந்து சிறிது இறங்கி வந்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ள வீரர்கள் சிலர் தங்களது முகாமுக்கு திரும்பியதாக அறிவித்தது.

மற்றொரு சவால்:

அதோடு, நேற்றைய தினம், ரஷ்யா தன் படைகளில் ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், போர் செய்வதற்கு விரும்பவில்லை என்றும் தகவல் தெரிவித்தது. ஆனால், தற்போது உக்ரைன் வேறொரு சவாலையும் எதிர்கொண்டு வருகிறது.

பத்து இணையதளங்கள் ஹேக்:

உக்ரைனின் தகவல் பாதுகாப்பு மையம் இது கூறும் போது, 'ரஷ்யாவைச் சேர்ந்த சைபர் குழு உக்ரைனின் பெரிய இரண்டு அரசு வங்கிகள் உட்பட குறைந்தது 10 இணையதளங்களை ஹேக் செய்துள்ளது. உக்ரைன் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய வங்கிகளான 'Privatbank' மற்றும் 'Sberbank' ஆகியவற்றில் ஆன்லைன் கட்டணங்கள் செலுத்துவது மற்றும் வங்கி பயன்பாடுகளில் சிக்கல் இருப்பதாக வங்கி பயனாளர்கள் புகாரளித்துள்ளனர்' எனக் கூறியுள்ளார். மேலும், உக்ரைனில் முடக்கப்பட்ட இணையதளத்தைத் மீட்க அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

10 கோடிக்கு மேல ஏலம் போன வீரர்.. உற்சாகத்துல ரூ.15,000-க்கு பீட்சா வாங்கி கொடுத்து ட்ரீட்.. ஐபிஎல் எப்படி எல்லாம் வேலை செய்யுது பையா

CYBER ATTACK, WEBSITES, BANKS, SECURITY, UKRAINE, இணையதளங்கள், வெப்சைட், உக்ரைன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்