இத மட்டும் 'வால்பேப்பரா' வச்சுராதீங்க சாமி! ஸ்மார்ட் போன்களை 'காவு' வாங்கும் அழகிய புகைப்படம்... கதறும் பயனாளர்கள்... 'காரணம்' என்ன?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்தற்போதைய லாக்டவுன் காலத்தில் அனைவருக்கும் ஒரு உற்ற நண்பனாக, உடன்பிறவா சகோதரனாக திகழ்வது ஸ்மார்ட் போன்கள் தான். முன்பு மாதிரி நினைத்த நேரம் கடைகளுக்கு செல்ல முடியாது என்பதால் குழந்தை போல அதை பொத்திப்பொத்தி பாதுகாக்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில் ஒரு அழகிய வால்பேப்பரை ஸ்மார்ட் போனில் வைத்தால் அது போனை கிராஷ் செய்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் ஐஸ் யுனிவர்ஸ் என்னும் பக்கம் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்த ட்வீட் வைரலான அதே வேளையில், சோதித்து பார்க்கிறேன் பேர்வழி என ஏராளமானோர் தங்கள் மொபைலில் இந்த வால்பேப்பரை வைத்து போன் கிராஷ் ஆகிவிட்டதாக வருத்தத்துடன் பதிவு செய்துள்ளனர்.
முதலில் சாம்சங் போன்களில் தான் இந்த பிரச்சினை அதிகம் என்று கூறப்பட்டது. ஆனால் சாம்சங் போன்கள் மட்டுமின்றி கூகுள், சியாமி, ஒன் பிளஸ், நோக்கியா என பிற ஆண்ட்ராய்டு போன்களும் இதே பிரச்சினையை சந்திப்பதாக கூறப்படுகிறது. இப்படி போன் செயலிழந்து போவதற்கு முக்கியக் காரணம் அந்தப் புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் color profile தானாம். இந்தப் புகைப்படம் கூகுளின் Skia RGB ப்ரோஃபைலைப் பயன்படுத்துகிறது.
இதுபற்றி 9to5Google என்ற பிரபல இணையதளத்தைச் சேர்ந்த டைய்லான் ரவுசல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இந்த வால்பேப்பரானது ஆண்ட்ராய்டு 11-யைப் பயன்படுத்தும் போன்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவற்றில் தானாகவே இந்தப் புகைப்படத்தின் color profile sRGB (Standard Red Green Blue) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிடுகின்றன. ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குக் கீழான ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைப் பயன்படுத்தும் போன்கள் இதைச் செய்வது இல்லை. இதனால்தான் அவை அந்தப் புகைப்படத்தை லோட் செய்ய முடியாமல் கிராஷ் ஆகி போன்கள் செயலிழந்து போகின்றன" என தெரிவித்து இருக்கிறார்.
ஒருவேளை உங்கள் மொபைலிலும் இந்த வால்பேப்பரை நீங்கள் வைத்துப்பார்க்க ஆசைப்பட்டால் அந்தப் புகைப்படத்தை sRGB கலர் ப்ரோஃபைலுக்கு மாற்றி விட்டுப் பயன்படுத்தலாம். இல்லையெனில் உங்கள் மொபைல் கிராஷ் ஆகிவிடும். பின்னர் மொபைலை ரீசெட் செய்து தான் நீங்கள் பயன்படுத்த முடியும். ஒரு வால்பேப்பரால் அப்படி என்ன வந்துவிட போகிறது? என நினைத்து ஏராளமானோர் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவில் ‘இனவெறிக்கு’ எதிராக வலுக்கும் போராட்டம்.. கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!
- "மச்சி... பப்ஜி விளையாடலாமா?".. "போன் இல்லயேடா!"... பப்ஜி மோகத்தால் சிறுவர்கள் விபரீதச் செயல்!.. அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!
- 'கணவன் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்காததால், தன் உடலில்...' புள்ளைங்க படிப்புக்கு கூட உதவ மாட்டீங்கல...! மனைவி செய்த அதிர்ச்சி காரியம்...!
- திருச்சி சிறுவனைத் தொடர்ந்து, “அப்பா போன் மூலம், பேஸ்புக்கில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றிவந்த” 16 வயது சிறுவன்.. அச்சத்தில் பெற்றோர்!
- இந்திய மதிப்பில் சுமார் '75 ஆயிரம்' ரூபாய்... பிரபல நிறுவனத்தின் தரமான 'சர்ப்ரைஸ்'... இனிமே 'Work From home' ஹேப்பி அண்ணாச்சி!
- செல்போன்ல ‘இன்டர்நெட்’ தீர்ந்து போச்சு.. ‘ரீசார்ஜ்’ பண்ண மறுத்த பெற்றோர்.. இளைஞர் செய்த விபரீதம்..!
- “கொரோனாவைக் கண்டறிய உதவும் புதிய செயலி!”.. 'கூகுள், ஆப்பிள்' இணைந்து 'உருவாக்கிய' இந்த 'ஆப்' அப்படி என்னதான் செய்யும்?
- 'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்!'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'!
- 'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்!'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'!
- இனி 'நிரந்தரமாக' வீட்டிலிருந்தே வேலை... 'அலுவலகமே' தேவையில்லை... அதிரடியாக 'பிரபல' நிறுவனம் வெளியிட்டுள்ள 'அசத்தல்' அறிவிப்பு!...