உலகின் மிகப்பெரிய பவர் பேங்க்.. யம்மாடி, இவ்ளோ பெருசா இருக்கு.. வெளிய கொண்டு போக ஒரு குட்டி யானை வேணும் போலையே

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சீனாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் சுமார் 27,000,000 mAh கொண்ட ஒரு பெரிய பவர் பேங்க் ஒன்றை உருவாக்கிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஏடிஎம்-ல பணம் திருட வரல.. இது வேற பிளான்.. மெக்கானிக் என திருடர்கள் உள்ளே நுழைந்து.. விசாரணையில் தெரிய வந்துள்ள ஷாக் தகவல்கள்

சீனாவைச் சேர்ந்த ஹேண்டி ஜெங் என்ற நபர் யூடியூப் ஒன்றை தொடங்கி அதில் பல புது முயற்சிகளை செய்துகொண்டிருப்பார். இதனாலேயே அவரின் யூடியூப் சேனலுக்கு அதிக பின்தொடர்பாளர்கள் இருப்பார்கள்.

புதுமையான தயாரிப்புகள்:

அண்மையில் கூட ஹேண்டி தன் யூடியூப்பில் பியானோ வடிவிலான பார்பிகியு தயார் செய்யும் புதுமையான இயந்திரம் மற்றும் சக்கர நாற்காலி கொண்டு களையெடுக்கும் இயந்திரம் ஆகியவற்றை செய்து பலரின் கவனத்தை ஈர்த்து வியூஸ் மற்றும் லைக்ஸை அள்ளினார்.

900 பவர் பேங்குகளுக்குச் சமம்:

இந்நிலையில் அவர் தற்போது 27,000,000 mAh கொண்ட ஒரு பெரிய பவர் பேங்க் ஒன்றை தயாரித்து உள்ளார். அந்த பவர் பேங்க் கிட்டத்தட்ட 900 பவர் பேங்குகளுக்குச் சமம். சுமார் 60 போர்ட்டுகள் உள்ள இந்த பவர் பேங்க் மூலம் லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற வெவ்வேறு வகையான கேட்ஜெட்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்துகொள்ள முடியுமாம்.

மின்சாரம் இல்லையே என்று கவலைப்படத் தேவையேயில்லை:

இந்த பவர் பேங்க்கை உருவாக்க மரம் மற்றும் உலோகம் போன்ற பொருள்களையும், எலக்ட்ரிக் காரின் பேட்டரியையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் இதனை ஐந்து வெவ்வேறு மின் கீற்றுகளைக் கொண்டு இணைத்துள்ளதால் அளவிலும் சக்தியிலும் பெரியதாக இருக்குமாம். ஜெங்  இதனை உருவாக்க எவ்வளவு செலவாயிற்று என்றும் இதை சார்ஜ் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்த தகவலை கூறவில்லை. இருப்பினும், .இந்த பவர் பேங்க் இருந்தால், நீங்கள் வெளியில் இருக்கும்போது மின்சாரம் இல்லையே என்று கவலைப்படத் தேவையேயில்லை' என கூறியுள்ளார்.

ஜெங் தன் யூடியூப்பில் வெளியிட்ட காணொலியில் பல ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் எலக்ட்ரிக் சைக்கிள் என அனைத்தையும் சார்ஜ் செய்து காட்டியிருந்தார். மேலும், டீவி, வாஷிங் மிஷின், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற சாதனங்களிலும் இணைத்துப் பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.

10000mAh, 20000mAh என பவர் பேங்க் வந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் ஒரேடியாக 27,000,000 mAh கொண்ட இந்த பெரிய பவர் பேங்க்கை கண்டுபிடித்த  ஜெங்கை அனைவரும் பாராட்டுவதோடு அவரை பார்த்து வியந்து வருகின்றனர்.

மாமாவுக்கு மரண தண்டனை வழங்கிய கிம்.. 9 வருஷம் கழிச்சு பொதுவெளிக்கு வந்த அத்தை.. என்ன தப்பு பண்ணினார் தெரியுமா?

CHINA, YOUTUBER, BIG POWER BANK, யூடியூபர், பவர் பேங்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்