‘ஒரு மிஸ்டேக் இருக்கு’!.. மைக்ரோசாப்ட்டை அலெர்ட் பண்ணிய ‘சென்னை’ இன்ஜினீயர்.. அடித்த ‘ஜாக்பாட்’!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

மைக்ரோசாப்ட்டில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய சென்னை ஆராய்ச்சியாளருக்கு அந்நிறுவனம் சன்மானம் கொடுத்து அசத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளரும் (Security researcher), இணையதள வடிவமைப்பாளருமான (Web Developer) லக்‌ஷமன் முத்தையா, மைக்ரோசாப்ட்டில் பயனர்களின் கணக்குகளை எளிதில் திருடும் வகையில் பிழை ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி அதன் விவரங்களை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்றும் மைக்ரோசாப்ட்டுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான மைக்ரோசாப்ட் நிறுவனம் 50,000 டாலரை (இந்திய மதிப்பில் ரூ.36,38,877) லக்‌ஷமன் முத்தையாவுக்கு சன்மானமாக கொடுத்துள்ளது. Bug Bounty Program என்ற திட்டத்தின் கீழ் இந்த சன்மானத் தொகை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக லக்‌ஷமன் முத்தையா இதே போல இன்ஸ்டாகிராமிலும் Bug ஒன்றை கண்டறிந்தார். அதற்காக 30,000 (இந்திய மதிப்பில் ரூ.21,82,741) டாலர் சன்மானமாக அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்