22 கோடி பாஸ்வேர்டுகள் லீக்… உங்க பாஸ்வேர்டு safe ஆனதா..? எப்படி அறிவது?



முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சட்ட அமலாக்கத்துறை மையங்கள் ஆன தேசிய க்ரைம் ஏஜென்ஸி (NCA) மற்றும் தேசிய சைபர் க்ரைம் யூனிட் (NCCU) ஆகிய மையங்கள் திருடப்பட்ட சுமார் 22 கோடி பாஸ்வேர்டுகள் மற்றும் இ-மெயில் ஐடி-க்களை மீட்டுள்ளது.

22 கோடி பாஸ்வேர்டுகள் லீக்… உங்க பாஸ்வேர்டு safe ஆனதா..? எப்படி அறிவது?


Advertising
>
Advertising

ஐக்கிய நாடுகளில் ஹேக் செய்யப்பட்ட ஒரு க்ளவுட் ஸ்டோரேஜ் மையத்தில் இருந்து இந்த 22 கோடி திருடப்பட்ட பாஸ்வேர்டுகளை மீட்டதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் பல பல கோடி பயனாளர்களிடம் இருந்து இந்த பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தற்போது NCA, தானம் ஆக ஒரு டேட்டாபேஸில் ‘Have I Been Pwned’ (HIBP) வைப்பதாக அறிவித்துள்ளது.

check whether your password is stolen or not?

‘Have I Been Pwned’ என்பது ஒரு இலவச ஆன்லைன் சேவை மையம் ஆகும். இந்த சேவையின் மூலம் யார் வேண்டுமானாலும் சர்வதேச அளவில் தங்களது பாஸ்வேர்டு அல்லது இ-மெயில் ஐடி திருடப்பட்டுள்ளதா அல்லது லீக் ஆகியுள்ளதா என்பது குறித்துத் தெரிந்துகொள்ளலாம். இந்த இலவச ஆன்லைன் சேவைக்குத் தான் தற்போது போலீஸ் சார்பில் இந்த மாபெரும் லீக் ஆன பாஸ்வேர்டுகளின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

உங்களது பாஸ்வேர்டு அல்லது இ-மெயில் ஐடி லீக் ஆகி உள்ளதா என்பதை அறிய முதலில், ‘Have I Been Pwned’ என்ற இணைய தளத்துக்கு செல்லவும். https://haveibeenpwned.com/ . இந்தத் தளத்தில் உங்களது இ-மெயில் முகவரியை டைப் செய்து pwned என்ற ஐகான் மீது க்ளிக் செய்யவும்.

உங்களது இ-மெயில் மற்றும் அதனது பாஸ்வேர்டு, அல்லது அது சார்ந்த பாஸ்வேர்டுகள் லீக் ஆகி இருந்தால் உடனடியாக உங்களுக்கு எச்சரிக்கை மெசேஞ் கொடுக்கப்படும். இதே வழி முறையைப் பின்பற்றி நீங்கள் உங்கள் மொபைல் எண் பதிவிட்டும் ‘செக்’ செய்து கொள்ளலாம்.

அதேபோல், அதே தள பக்கத்தில் Passwords என்னும் டேப் இருக்கும் அதில் உங்கள் பாஸ்வேர்டுகளை டைப் செய்து அது அந்தப் பட்டியலில் இருக்கிறதா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளலாம். இது பாதுகாப்பான இணைய தளம் என்ற்ய் தேசிய சைபர் செக்யூரிட்டி யூனிட் கூறுகிறது.

அப்படி உங்களது பாஸ்வேர்டுகள், இ-மெயில் முகவரிகள் லீக் ஆனதற்கான எச்சரிக்கை உங்களுக்கு வந்தால் உடனடியாக உங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிவிடுங்கள். எளிதாக இருக்கும் என்று உங்கள் பெயர், முகவரி, போன் எண், பிறந்த நாள் தேதி ஆகியன நிச்சயம் பலமான பாஸ்வேர்டுகள் ஆக இருக்காது.

TECHIE, STOLEN PASSWORDS, PASSWORDS LEAK, பாஸ்வேர்டுகள் திருட்டு, பாஸ்வேர்டுகள் லீக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்