‘ஒரேயொரு Zoom அழைப்பு… 900 ஊழியர்களின் கதை க்ளோஸ்’- Better.com சிஇஓ செய்த காரியத்தால் வெடிக்கும் சர்ச்சை!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பெட்டர் டாட் காம் (Better.com) என்னும் நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க், ஒரு ஜூம் அழைப்பின் மூலம் 900 நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். இந்த வீடியோ அழைப்பு குறித்தான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்டர் டாட் காம் என்பது ஆன்லைன் மார்ட்டேஜ் நிறுவனம்.

Advertising
>
Advertising

இந்த நிறுவனமானது சுமார் 10,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. தற்போது அந்த நிறுவனம் 9 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது 900 பேர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் தான்.

விஷால் கார்க் ஜூம் காலில், ‘நான் மிகவும் மோசமான செய்தியுடன் தான் இந்த காலில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இது நான் எடுத்த முடிவு. எனவே நானே உங்களிடம் அதை தனிப்பட்ட முறையில் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகவே இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு முன்னர் இதைப் போன்ற முடிவை என் வாழ்நாளில் ஒரேயொரு முறை தான் எடுத்துள்ளேன். அப்போது நான் ஒரு நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக சந்தை மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. எனவே, நம் நிறுவனத்திலிருந்து சுமார் 9 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று நான் முடிவு செய்துள்ளேன்.

இதைச் சொல்வது எனக்கு மிகவும் கடினமானதாகவும் கஷ்டமாகவும் உள்ளது. இதை வேறு எப்படிச் சொல்வது என்பது எனக்குத் தெரியவில்லை. உங்களிடம் நான் சொல்வதற்கு வேறு எதாவது நல்ல செய்தி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு என்னால் உங்களிடம் இந்தச் செய்தி தான் உள்ளது. நம் நிறுவனத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மிகவும் ஆழ்ந்து சிந்தித்துப் பின் எடுத்துள்ளேன்.

இந்த வீடியோ காலில் என்னுடன் இணைந்திருக்கும் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள் என்பது வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். இந்த நிறுவனத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தமைக்கும், சேவை செய்தமைக்கும், இந்த நிறுவனத்தை வளர்த்தமைக்கும் நன்றி.

உங்களுக்கு அடுத்த படியாக நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையிடமிருந்து அதிகாப்பூர்வ மின்னஞ்சல் வரும். அதன் மூலம் நீங்கள் அனைவரும் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்தும், பணியில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படும்.

அடுத்தபடியாக நீங்கள் 3 மாதங்களுக்கு நிதி சார்ந்த சிக்கல்கள் எதையும் சந்திக்கக் கூடாது என்னும் எண்ணத்துடன் அதற்கான நிதி ஆதாரம் வழங்கப்படும். உங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டம் துணை இருக்கட்டும். இந்த நிறுவனத்துக்காக நீங்கள் செய்த அத்தனை காரியங்களுக்கும் நன்றி’ என்று எந்த வித தடுமாற்றங்களும் இல்லாமல் பேசி முடித்தார்.

இந்த ஜூம் காலை வீடியோ பதிவு செய்தவரும் பெட்டர் டாட் காமின் ஒரு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், விஷால் கார்க் பணி நீக்கம் குறித்த செய்தியைச் சொல்ல சொல்ல கதறுகிறார். செய்வதறியாமல் தவிக்கிறார். பதற்றத்தில் பிதற்றுகிறார். அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அவருக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

JOBS, BETTER.COM, ZOOM CALL, LAYOFFS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்