டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டிக் டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.
டிக் டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்குமாறு கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் டிக் டாக் செயலியை தத்தமது பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலியை இந்தியாவில் நீக்கியுள்ளது.
முன்னதாக தங்கள் தளத்தில் இருந்த விதிமுறைகளை மீறிய 60 லட்சம் பதிவுகளை நீக்கிவிட்டதாக டிக் டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் 13 வயதுக்கு மேற்பட்டவர்களே இச்செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விகாரத்தில் அரசின் விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் டிக் டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி!
- 'துப்பாக்கி வெடித்ததால்.. நண்பன் பலி'.. 'டிக் டாக்' வீடியோ விபரீதம்!
- அடேங்கப்பா! அந்த விஷயத்துல அமெரிக்காவை முறியடித்த இந்தியா.. ஷாக்கிங் சர்வே!
- 'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா?
- ‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா!
- 12 மணிநேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்.. அசால்ட் காட்டிய லசித் மலிங்கா..
- அப்படி என்ன பிரச்சனை? இந்தியாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்!
- 'இனிமேல் ‘டிக்-டாக்’ல...'வசனம்,டான்ஸ்' எல்லாம் பண்ண முடியாது'...அதிரடி நடவடிக்கையில் ஐகோர்ட்டு!
- இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
- அரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்!