குறைந்த கட்டணங்களில் சிறப்பு ப்ரீபெய்டு திட்டங்கள்… BSNL வழங்கும் கவர்ச்சிகர ஆஃபர்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

டெலிகாம் துறை நிறுவனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ப்ரீபெய்டு கட்டணங்களை உயர்த்துவதாக சமீபத்தில் தான் அறிவிப்புகளை வெளியிட்டன. வாடிக்கையாளர்கள் பர்ஸை பதம் பார்க்கும் மொபைல் ப்ளான் கட்டணங்களுக்கு மத்தியில்  BSNL மிகவும் குறைந்த விலை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

Advertising
>
Advertising

அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டெலிகாம் நிறுவனமான BSNL தொடர்ச்சியாக குறைவான விலையில் ப்ரீபெய்டு ப்ளான்கள், சிறப்பு வவுச்சர்கள் என வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டு சிறப்பு கட்டண வவுச்சர்களை 250 ரூபாய்க்கு வழங்குவதாக BSNL அறிவித்துள்ளது.

88 ரூபாய் முதல் 209 ரூபாய் வரையில் BSNL திட்டங்கள் உள்ளன. இவற்றுள் வாய்ஸ் கால், மொபைல் டேட்டா மற்றும் போதிய வேலிடிட்டி நாட்கள் கொடுக்கப்படுகின்றன. வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 4ஜி சேவையை முழு வீச்சில் அறிமுகம் செய்ய ஆயத்தமாகி உள்ளது BSNL. BSNL நெட்வொர்க்கை பயன்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சத் அஷ்வானி வைஷ்ணவ் முதல் 4ஜி மொபைல் அழைப்பை மேற்கொண்டார்.

75 ரூபாய் BSNL ப்ளான்-க்கு 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 50 நாட்கள் வேலிடிட்டி உடன் இலவச ரிங்டோன்களும் வழங்கப்படுகின்றன. கூடுதலாக 88 ரூபாய்க்கான ப்ளானில் அதே ஆஃபர்கள் உடன் 90 நாட்களுக்கான வேலிடிட்டி தரப்படுகிறது. இதுபோக 94 ரூபாய்க்கான ப்ளானில் 3ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான உள்நாட்டு வாய்ஸ் கால், எந்த நெட்வொர்க்-க்கும் இதில் பேசிக்கொள்ள முடியும். இதனது வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும்.

இலவச கால்களுக்கு நிமிடத்துக்கு 30 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக 209 ரூபாய் ளான் 90 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் வருகிறது. 198 ரூபாய் ப்ளான், 50 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 40kbps வேகத்தில் 2ஜிபி வழங்கப்படும்.

SMARTPHONE, BSNL, JIO, BSNL OFFERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்