நாளொன்றுக்கு '2 ஜிபி' டேட்டா.. 54 நாட்கள் வேலிடிட்டி... 197 ரூபாய்க்கு 'வொர்த்தான' ரீசார்ஜ்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சமீபத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கணிசமாக உயர்த்தின. ஆனால் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் எந்தவொரு ரீசார்ஜ் திட்டங்களின் விலையையும் உயர்த்தவில்லை. மேலும் 4ஜி சேவையையும் தற்போது சோதனை முறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பரிசோதித்து வருகிறது.

இந்தநிலையில் மற்ற எந்த நிறுவனங்களும் அளிக்காத சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக டேட்டா பிரியர்களுக்கு இந்த திட்டம் செம வொர்த்தாக இருக்கும். 197 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா என்ற விகிதத்தில் மொத்தம் 54 நாட்களுக்கு 108 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் குரல் அழைப்புகள் எதுவும் இலவசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை நீங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா ஆகிய இரண்டும் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ரூ.939 அல்லது ரூ.448 போன்ற பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.939 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 80 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவையும், 250 நிமிட குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. உடன் பிஆர்பிடி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற கூடுதல் நன்மையையும் வழங்குகிறது. மறுபுறம் பிஎஸ்என்எல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 84 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவையும், 250 நிமிட குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்