என்னங்க இது.. பச்சோந்தி மாதிரி கலர் மாறுது?.. 'BMW' கொண்டு வந்த அசத்தல் 'Technology'
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்லாஸ் வேகாஸ் : உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனமான BMW காரின் நிறத்தை மாற்றிக் கொள்வது பற்றி, அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடிக்கடி பல புதிய வடிவிலான கார்களையும், அதிலுள்ள தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டு இயங்கி வருகிறது BMW நிறுவனம்.
இந்த BMW நிறுவனத்தின் கார்களுக்கு, மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. அந்த வகையில், மிகவும் புகழ் வாய்ந்த இந்த நிறுவனம், தற்போது அசர வைக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெயிண்ட் அடிக்க வேண்டாம்
அப்படிப்பட்ட BMW நிறுவனம் மூலம் உருவாக்கப்படும் கார்களில், புதுவித தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதாவது, தங்களுடைய காரில், புதிதாக பெயிண்ட் எதுவும் அடிக்காமலேயே, ஆட்டோ மெட்டிக்காக அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பது தான் அது.
E ink செய்முறை
இதுகுறித்து, சமீபத்தில் லாஸ் வேகாஸ் பகுதியில், எலெக்ட்ரானிஸ் கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது BMW ix காரின் மீது தொழில் நுட்பத்தின் உதவியுடன் இதனை விளக்கியுள்ளனர். E ink என்பதின் உதவியுடன் இந்த முறையை, காருக்குள் இருந்து ஒரு பட்டனை மட்டும் அழுத்தி, நமது காரின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.
தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்
இந்த E ink என்பது, மனித முடியின் தடிமனுக்கு சமமான விட்டம் கொண்ட, பல மில்லியன் மைக்ரோ காப்ஸ்யூல்களை உடையது. இவை, Postively Charged Pigments மற்றும் Negatively charged pigments ஆகியவற்றைக் கொண்டு இயங்கக் கூடியது. இத்துடன், மின்சார இணைப்புடன் கூடி, நமக்கு தேவையான கலரை மாற்றிக் கொள்ளலாம்.
என்னென்ன நிறங்கள்
தற்போதைக்கு வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களை தான் BMW நிறுவனம் இதில் இணைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், இது ஒரு டிசைன் செய்யப்பட்ட திட்டம் மட்டும் தான் என கூறியுள்ள BMW நிறுவனம், அவர்களின் மின்சார வாகனங்களில், இந்த தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தி பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிந்தனை மூலம் செய்யப்பட்ட முதல் ட்வீட்.. திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்பம்.. எப்படி சாத்தியம்?
- “ஆபீஸ் ஜூம் மீட்டிங்ல ஆடு பங்குபெறுதா?”.. 'மொத்த வாழ்வையும் முடக்கிய லாக்டவுன்!'.. ‘நம்பவே முடியாத’ ஐடியாவை வைத்து.. அடி ‘தூள்’ பண்ணிய பெண்!
- “இந்த பீக் டிராஃபிக்கை சமாளிக்க முடியல..Underdog படத்துல வர்ற மாதிரி!”.. ‘வாட்ஸ் ஆப் சர்ச்சையால்’ மொத்தமாக ‘படையெடுத்த’ பயனாளர்கள்.. திணறிப் போன ‘பிரபல’ செயலி.. இப்போது சொன்ன நற்செய்தி!
- 'டிஸ்பிளே' சரியா ஒர்க் ஆகாததால் வந்த வினை,,.. 'காசு' குடுக்கலன்னா உன் மானம் போய்டும்ன்னு 'டார்ச்சர்' பன்றான் சார்,,.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த 'விபரீதம்'!!!
- ஐடி ஜாம்பவான்கள் கையில தான் 'இது எல்லாமே' இருக்கு!.. இந்த 'நிலைமை'லயும் இந்தியாவுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!
- ஹை ஃபை வாழ்க்கை... கடவுள் வழிபாடு!.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'!.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி!
- சீன ஆப்களுக்கு வெச்சாச்சு ஆப்பு! டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் உட்பட 59 ஆப்கள் தடை! இந்தியா அதிரடி!
- ‘எங்களுக்கு வேற வழி தெரியல’.. ‘கொரோனா’ கொடுத்த பெரிய அடி.. உலகின் மிக ‘பிரபல’ நிறுவனம் எடுத்த முடிவு..!
- இந்த ஒரு 'வசதி' போதுமே... மத்த 'வீடியோ' கால் பயனாளர்களை மொத்தமா இழுக்க... 'கூகுள்' போட்ட 'மாஸ்டர்' பிளான்!
- 'நானோ’ துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல் பூச்சு...' 'கொரோனா' வைரசை செயலிழக்க செய்யும் 'புதிய தொழில்நுட்பம்...' 'சென்னை ஐ.ஐ.டி.யின் அசத்தல் கண்டுபிடிப்பு...'