கூகுளில் இருந்த மிகப்பெரிய ஓட்டை.. எப்படி இது உங்க கண்ணுல மாட்டுச்சு? கண்டுபிடித்த இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பீகார்: ரித்துராஜ் சவுத்திரி என்ற 19 வயது இளைஞர் கூகுளில் இருக்கும் குறைபாட்டை கண்டறிந்து சாதனை படைத்து உள்ளார்,

Advertising
>
Advertising

உலகில் அதிக பேரால் பயன்படுத்தப்படும் சர்ச் எஞ்சின் கூகுள் ஆகும். இது மிகவும் பாதுகாப்பானது என்றாலும் கூட எல்லா சர்ச் எஞ்சின்களில் இருப்பது போன்றும் இதிலும் சில குறைபாடுகள் உண்டு. அதாவது சில கோடிங் குறைபாடுகள், அல்லது அப்டேட் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும்.

கூகுளில் இருந்த குறைபாடு:

இது மாதிரியான குறைபாடுகளை தீர்ப்பதற்காக கூகுள் அடிக்கடி தனது கோடிங்கை அப்டேட் செய்து வருவது வாடிக்கை. அதேப் போன்று புதிய பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது. சில நேரங்களில் கூகுள் பயனாளிகள் சிலரும் கூட கூகுளில் இருக்கும் இது போன்ற குறைபாடுகளை கண்டுபிடித்து அதை சொல்வது உண்டு. அதாவது உங்கள் ஆப்பில் இந்த மாதிரியான பிரச்சனை உள்ளது, அதை சரி செய்யுங்கள் என கூறுவார்கள்.

இந்நிலையில்தான் ரித்துராஜ் சவுத்திரி என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது பொறியியல் மாணவர் கூகுளில் இருக்கும் குறைபாடு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இவர் மணிப்பூரில் இருக்கு ஐஐடி-யில் படித்து வருகிறார் . பி-டெக் படித்து வரும் இவர் கணினி பொறியியல், சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்த படிப்புகளில் ஆர்வம் அதிகமுள்ளவர்.

கூகுள் செய்த சோதனை:

இந்நிலையில் கூகுள் சர்ச் எஞ்சினில் இருக்கும் பிழையை இவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பிழை மூலம் கூகுளில் ஹேக்கிங்-இல் ஈடுபடும் சமூக விரோதிகள் எளிதாக தாக்குதல்கள் நடத்தி இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த குறைபாட்டை கண்டுபிடித்த நிலையில் ரித்துராஜ் அதை பற்றி கூகுளிடம் தெரிவித்துள்ளார். இதை கூகுளும் சோதனை செய்து பார்த்துள்ளது. சோதனையின் முடிவில் அதில் பிழை இருந்தது உண்மை தான் என கண்டுபிடிக்கப்பட்டது.

Google Hall of Fame Award:

இதனையடுத்து கூகுளும் குறைபாட்டை ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிழையை வேறு ஹேக்கர்கள் கண்டுபிடித்து இருந்தால் அதை வைத்து மிகப்பெரிய சிக்கலில் ஈடுபட்டிருப்பார்கள். இது ஒரு பெரிய குறைபாடுதான் என்று கூகுள் ஒத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில்தான் குறைபாட்டை கண்டுபிடித்த ரித்துராஜூக்கு கூகுள் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு Google Hall of Fame Award என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.

கூகுள் ஆராய்ச்சியாளர்:

அதுமட்டுமல்லாமல், கூகுள் ஆராய்ச்சியாளர் என்ற பட்டியலில் இவருடைய பெயரை கூகுள் இணைத்துள்ளது. இந்நிலையில் கூகுளில் இருக்கும் மேலும் சில குறைபாடுகளை இவர் கண்டுபிடிக்கும் திட்டத்தில் உள்ளார். தற்போது இவர் P-2 எனப்படும் இரண்டாம் கட்ட குறைபாடுகளை கண்டுபிடித்துள்ளார். P-0 எனப்படும் இதை விட மேம்பட்ட குறைபாடுகளை இவர் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அவருக்கு கூகுளில் பணி அல்லது அன்பளிப்புகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

BIHAR, RITHURAJ CHAUDHARY, GOOGLE, ரித்துராஜ் சவுத்திரி, கூகுள், பீகார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்