Google Lens Feature வசதி: உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கலாம்... இதில் சூப்பர் ட்ரிக்ஸ் இருக்கு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கூகிள் நிறுவனம் தனது செயலிகளில் பல்வேறு விதமான புது புது அம்சங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த வகையில் கூகுள் லென்ஸ் என்னும் கூகுளின் ஒரு சிறப்பு அம்சம் குறித்த தகவல்களை இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் போட்டோஸ் சென்றால் அங்கு கூகுள் லென்ஸ் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இந்த கூகுள் லென்ஸ் வழியா ஒரு போட்டோ எடுத்தால் அதனுடைய அத்தனை விவரங்களையும் முழுவதுமாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதே போல் ஒரு பெரிய கட்டுரையோ, கதையோ இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதை எடுத்துத் தனியாக சாஃப்ட் காப்பி ஆக டைப் பண்ணுவது சிரமமான காரியம் தான்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த சிரமங்கள் நன்றாகவே தெரிந்து இருக்கும். ஆனால், கூகுள் லென்ஸ் இந்த வேலையை சுலபம் ஆக்கிடும். இப்போது ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் டைப் செய்ய நினைத்தால் கூகுள் லென்ஸ் வழியாக நீங்கள் அந்தப் புத்தகத்தை புகைப்படம் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தாலே போதுமானது. புத்தகத்தில் இருப்பவை எல்லாம் டெக்ஸ்ட் வடிவில் உங்கள் செல்போனில் தெரிந்துவிடும். நீங்கள் சேவ் செய்து கொள்ளலாம்.
இந்த கூகுள் லென்ஸ் அம்சம் மொபைல் போனில் மட்டுமல்ல. கூகுள் க்ரோம் ப்ரவுசர் மூலமாகவும் நாம் உபயோகப்படுத்த முடியும். கூகுள் க்ரோம் ப்ரவுசர் சென்று அந்தப் பக்கத்தில் 'ரைட் க்ளிக்' செய்தால் Search images with Google Lens என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை செலெக்ட் செய்தாலே போதும் நீங்கள் படிக்கும் அல்லது பார்க்கும் பக்கத்தில் இருக்கும் அத்தனைத் தகவல்களும் உங்கள் டெக்ஸ்ட் வடிவில் கிடைத்துவிடும்.
இல்லையென்றால் மற்றொரு வழியும் இருக்கிறது. Address bar பகுதியில் சென்று Chrome:://flags என்று டைப் செய்யுங்கள். பின்னர் அந்த Search bar-ல் images with Google Lens என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்தும் நீங்கள் கூகுள் லென்ஸைப் பயன்படுத்தலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கூகுள் க்ரோம் பயன்பாட்டாளர்களே… உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை..!- அரசு சொல்றத கேளுங்க..!
- 'உங்க கஷ்டம் புரியுது...' அதுக்காக தான் ரூ.1.2 லட்சம் போனஸ்...! - அதிரடியாக அறிவித்த 'பிரபல' நிறுவனம்...!
- இனிமேல் 'கூகுள் பே'ல அதெல்லாம் 'சேவ்' பண்ணக் கூடாது...! - புதிய 'கட்டுப்பாடுகள்' குறித்து கூகுள் நிறுவனம்...!
- 'அந்த மாதிரி' கண்டென்ட் 'அப்லோட்' பண்ணுனீங்கனா... 'சும்மா சும்மா கேட்டுட்டு இருக்க மாட்டோம்...' 'உடனே ஆக்சன் தான்...' அதுவாகவே கண்டுபிடிச்சிடும்...! - கூகுள் அதிரடி...!
- VIDEO: ஐயோ, 'அத' பண்ணனும்னு சுத்தமா நியாபகம் இல்ல...! 'வீடியோ கால்'ல பேசுறப்போ 'சுந்தர் பிச்சை' செய்த தவறு...! - வைரலாகும் வீடியோ...!
- 'வீட்ல இருந்து வொர்க் பண்றதுக்கு...' அவ்ளோ 'சம்பளம்'லாம் தர முடியாதுங்க...! - 'வொர்க் ஃப்ரம் ஹோம்' ஊழியர்களுக்கு 'ஷாக்' கொடுத்த 'பிரபல' நிறுவனம்...!
- ‘எல்லாம் கைகூடி வர நேரத்துல இப்படியா நடக்கணும்’!.. கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 4,400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ்.. பரபரப்பில் ‘Tech’ உலகம்..!
- ‘அதை பார்த்ததுமே கண்கலங்கிட்டேன்’!.. ‘நான் கடைசியா அழுதது அப்போதான்’.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கம்..!
- கூகுள் 'எங்கள' நசுக்க பாக்குறாங்க...! அவங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல...' - இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்...' - 'விஸ்வரூபம்' எடுக்கும் விவகாரம்...!
- ஒரே கம்பெனி...! ஒரே சம்பளம்...! இந்த வருசத்துல 'டாப் சேலரி' வாங்க போற ட்வின்ஸ்...! - எந்த கம்பெனியில ஜாப் கிடைச்சிருக்கு தெரியுமா...?