‘இந்த 2 வருஷத்துல மட்டும் ரூ.547 கோடி!’.. ‘உங்க அனுமதியே தேவையில்ல!’.. ‘மிரட்டும் டெபிட் கார்டு, ஏடிஎம், நெட் பேங்கிங் மோசடிகள்’!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்நம்மிடம் இருந்து , நமக்கே தெரியாமல் நம் தகவல்களைத் திருடிக்கொண்டு பெருகி வரும் கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மோசடிகள் அதிரவைத்துள்ளன.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மட்டும் 128 கோடி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், சென்ற ஆண்டு இறுதியில் மட்டும் 21 ஆயிரத்து 41 மோசடிக் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு 6 வழக்குகள் இது தொடர்பாக பதியப்படுவதுதான் கூடுதல் அதிர்ச்சி தரும் தகவல்.
இந்தியன் ரிசர்வ் வங்கியோ, இதுபற்றி கூறும்போது, ‘இந்த 92 நாட்களில் அதிக அளவிலான மோசடிகள் (94.52%) ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு மூலமாகவே நடந்துள்ளன. இவற்றுள் 11 ஆயிரத்து 508 மோசடிகளுள் 6 ஆயிரத்து 117 மோசடிகள் கிரெடிட் கார்டு மோசடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி 3 ஆயிரத்து 866 நெட் பேங்கிங் மோசடிகளால் ரூ.197 கோடி மற்றும் ரூ.3.6 கோடி உள்ளிட்ட மதிப்பீட்டிலான பரிவர்த்தனைகள் சுரண்டப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
அதாவது டிசம்பர் 2019 வரையிலான கடந்த 2 வருடங்களில் மட்டும் மொத்தமாக 547 கோடி ரூபாய் வரையிலான மோசடிகள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் ஏடிஎம் ஸ்கிம்மர்ஸ் எனும் சிறிய கருவியை ஏடிஎம்மில் பொருத்தி, வாடிக்கையாளர்களின் தகவல்கள் இண்டர்கிரேடட் ஸ்ட்ரைப் ரீடர் மூலம் திருடப்பட்டும், அதில் இருக்கும் ரகசிய கேமரா மூலம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் பின் நம்பர்கள் கண்காணிக்கப்பட்டும் நடந்துள்ளதாக சைபர் க்ரைம் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மெசேஜை’ பார்த்து ‘பதறிப்போய்’ புகார் கொடுத்த பெண்... ‘54 வழக்குகளில்’ தேடப்பட்ட கும்பல்... ‘ஆடம்பர’ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்துவந்த காரியம்...
- ‘இது 651-வது வைரஸ்’!.. ‘ATM மெஷின்ல இருந்துகூட கொரோனா பரவும்’.. புது தகவல் கொடுத்த வல்லுநர்..!
- கிரெடிட், டெபிட் கார்டு ‘பயனாளர்கள்’ கவனத்திற்கு... மார்ச் ‘16ஆம் தேதிக்குள்’ பயன்படுத்தாவிட்டால்... இனி ‘இந்த’ சேவையை பயன்படுத்த முடியாது...
- ‘விஜய் தேவரகொண்டாவின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி’.. ‘பெண்களிடம் ஆபாச உரையாடல்!’.. ‘பொறி வைத்து பிடித்த போலீஸார்!’
- 'நீங்க போங்க' ... 'நானே எடுத்துக்குறேன்' ... பணம் எடுத்ததாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த பெண்
- ‘ஏடிஎம் கார்டு மேலே பத்னாரு நம்பர் சொல்லுங்கேமா’.. தமிழ்நாட்டை டார்கெட் பண்ணி வேலைபார்த்த ஸ்பெஷல் டீம் இதான்!
- “பின் நம்பர் சொல்லுங்க.. கார்ட பத்திரமா வெச்சுக்கங்க..”.. “நபர் செய்த அதிர்ச்சி காரியம்!”.. வைரல் சிசிடிவி காட்சிகள்!
- ‘‘வேலை கிடைக்கல”... விரக்தி அடைந்த இளைஞர் செய்த காரியம்... அதிர்ந்த போலீசார்!
- VIDEO: ‘தம்பி வயசாயிடுச்சுனு நெனைச்சயா’!.. ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்..!
- “சார் நான் அந்த ஆபிஸ்லேர்ந்து பேசுறேன்’’... ‘‘உங்க ஏடிஎம் கார்டு நம்பரை சொல்லுங்க’’... ‘மர்மநபரால் நடந்த சோகம்’!