10 ஆண்டுகளில் இதுவே முதல்முறை... ஐபோன் உற்பத்தியை ஆப்பிள் நிறுத்தியது ஏன்?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு வியாபார நிறுவனங்களும் முறையான பிசினஸ் இல்லாமல் தத்தளித்து வருகின்றன. அதற்கு ஆப்பிள் நிறுவனமும் விதி விலக்கல்ல. சுமார் 10 ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம், ஐபோன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

Advertising
>
Advertising

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சப்ளை செயினில் உள்ள பிரச்சனைகள் காரணமாக டெக் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மிகப் பெரும் சவாலை சந்தித்து வருகின்றன. ஆனால் உலகின் மிகப் பெரும் டெக் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும், ஆப்பிள் இந்த சப்ளை செயின் பிரச்சனையை கடந்த பல ஆண்டுகளாக திறம்பட சமாளித்து வந்தது.

உலக அளவில் எந்த வித பொருளாதார நெருக்கடி வந்த போதிலும், எந்த வித இயற்கை பேரிடர்கள் வந்த போதிலும், மற்றும் பல புதிய பிரச்சனைகள் வந்த போதிலும் தனது பொருட்களின் சப்ளை சீராக இருப்பதை உறுதி செய்து வந்தது ஆப்பிள் நிறுவனம். ஆனால், அந்த கதை தற்போது மாறியுள்ளது.

டெக் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள்படி, ஐபோன் தயாரிப்பில் முக்கிய பங்காற்றும் சில பாகங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சரி வர கிடைக்கவில்லை என்றும், இதனால் அதன் சப்ளை செயின் பாதிக்கப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 13 ஸ்மார்ட் போன் உற்பத்தியை கிடு கிடுவென உயர்த்த திட்டமிட்டிருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் திட்டப்படி மூன்று மாதங்களில் 90 மில்லியன் போன் யூனிட்டுகளை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த கணக்கில் சுமார் 10 மில்லியன் யூனிட்டுகளை தற்போது உற்பத்தி செய்ய முடியாத இக்கட்டான சூழலுக்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

ஐபோன் மட்டுமல்லாமல், ஆப்பிளின் புதிய ஐபேட் உற்பத்தியும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். முக்கியப் பொருட்கள் கிடைப்பதில் சுணக்கம் இருப்பதைத் தாண்டி சீனாவில் நிலவி வரும் பல்வேறு சூழல்களும் இந்த பிரச்சனைக்கு வித்திட்டு உள்ளதாம்.

இந்த சப்ளை பிரச்சனை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் வரும் காலங்களில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் பில்லியன் கணக்கில் இழப்பை சந்திக்க நேரிடலாம். உலக அளவில் கிறிஸ்துமஸ் சமயங்களில் பலரும் தங்களுக்கும், தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆப்பிள் நிறுவன பொருட்களை அதிகமாக பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு அது அந்த அளவுக்குச் சாத்தியமில்லை எனத் தெரிகிறது.

APPLE, IPHONE, ஐபோன், ஆப்பிள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்