ஒரே ஒரு சின்ன Change.. 600 கோடி லாபத்தை அள்ளிய ஆப்பிள் கம்பெனி.. ஓஹோ.. இதுதான் அந்த சீக்ரெட்டா..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஒரே ஒரு சிறிய மாற்றத்தின் மூலமாக ஆப்பிள் நிறுவனம் ரூபாய் 600 கோடி வரை கூடுதல் லாபம் அடைந்துள்ளது.
டெக்னாலஜி துறையில் ஜாம்பவானாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபோன் 12 சீரிசை அறிமுகம் செய்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்த போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது விஷயம் அதுவல்ல, அந்த போன்களின் பெட்டிகளில் சிறிய மாற்றம் ஒன்றினை ஆப்பிள் செய்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு கூடுதலாக 600 கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாற்றம்
ஐபோன் 12 போன்கள் அடங்கிய பெட்டியில் சார்ஜர் மற்றும் இயர் போன்களை அந்த நிறுவனம் நீக்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இனி விற்பனையாகும் அனைத்து ஐபோன் பெட்டிகளின் அளவை குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது. இதன் மூலம் வழக்கமான அளவை விட 70% கூடுதலாக ஐபோன்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
என்ன காரணம்?
ஐபோன்கள் அடங்கிய பெட்டிகளின் அளவை குறைப்பதன் மூலம் இந்த பெட்டிகளை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களின் அளவு குறைவதோடு கார்பன் உமிழ்வும் கட்டுப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த முடிவினால் மின்னணு கழிவுப் பொருட்களின் அளவும் குறைக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் காரணம் தெரிவித்திருந்தது.
லாபம்
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வித்தியாசமான முடிவின் மூலம் வழக்கத்தைவிட அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது அந்நிறுவனம். 2020 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் உலகம் முழுவதும் 190 மில்லியன் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. பெட்டிகளின் அளவை குறைத்ததால் ஒரு பெட்டிக்கு 35 டாலர் வரை அந்த நிறுவனத்துக்கு லாபம் கிடைத்திருக்கிறது.
சார்ஜர் மற்றும் இயர் போன்களை தனியாக விற்பனை செய்ததன் மூலம் 296 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. ஆக மொத்தமாக ஆப்பிள் நிறுவனம் செய்த இந்த மாற்றத்தின் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 600 கோடி ரூபாய்) கூடுதலாக கிடைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொடுத்த டாக்குமெண்ட் எதுவுமே உண்மை இல்ல.. ‘ஐபோன்’ வாங்க பெண் செஞ்ச காரியம்.. வசமாக சிக்கிய பின் அடுத்தடுத்து வெளிவந்த ஷாக்..!
- Russia – Ukraine Crisis: "உக்ரைனுக்கு துணை நிற்போம்".. ஆப்பிள் நிறுவனம் எடுத்த பரபரப்பு முடிவு..
- 3-வது தடவையும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்..அப்படியென்ன தான் சிக்கல்?
- 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறை... ஐபோன் உற்பத்தியை ஆப்பிள் நிறுத்தியது ஏன்?
- '25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பண்ணிருக்காங்க...' 'எந்த' ஆன்லைன் தளத்தில்...? - ஐபோன் லவ்வர்ஸ்-க்கு கிரேட் நியூஸ்...!
- 'அஞ்சு ரூபாய் துட்டும், துணி நனைக்குற சோப்பும் வாங்கவா...' இவ்வளவு கஷ்டப்பட்டு 'அத' ஆர்டர் பண்ணினேன்...! 'பல வருஷ கனவு...' - 'பார்சலை' பிரித்தபோது 'நொறுங்கிப்' போன இளைஞர்...!
- VIDEO: சத்தியமா 'ஐ-போன்' தான் ஆர்டர் பண்ணினேன்...! 'ஆனா வந்தது அது இல்ல...' 'நொறுங்கி போன இளைஞர்...' - மனதை குளிர வைத்த ஃப்ளிப்கார்ட்...!
- 'இந்த மனுஷன் போல சம்பளம் வாங்குனா எப்படி இருக்கும்'... 'இளைஞர்களின் கனவு நாயகன் ஆப்பிள் CEO'... இந்த ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா?
- நாங்க 'டெஸ்லா' கார் தர்றோம்...! உங்களுக்கு 'ஐ-போன்' வேணுமா...? இதென்ன பிரமாதம்...! 'தங்கக்கட்டியே வாங்கிட்டு போலாம்...' - ஆனா நீங்க பண்ண வேண்டியது 'அது' மட்டும் தான்...!
- 8 மாசத்துக்கு முன்னாடி நடந்த 'அந்த' சம்பவம்...! 'இதுக்காக தானே இத்தனை நாளா காத்திட்டு இருந்தேன்...' 'இது அவங்களே தான்...' - டாக்ஸி டிரைவர் செய்த 'வேற லெவல்' காரியம்...!