‘சேகரிக்கப்பட்ட அந்தரங்க உரையாடல்கள் கசிந்ததா..?’ பெரும் சர்ச்சையில் சிக்கிய.. ‘பிரபல செல்ஃபோன் நிறுவனம்’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சிரி மென்பொருளில் சேமிக்கப்படும் அந்தரங்க உரையாடல்களை பணியாளர்கள் கேட்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் ஐஃபோனிலுள்ள சிரி மென்பொருளில் சேமிக்கப்படும் பயனாளர்களின் அந்தரங்க உரையாடல்களைக் கேட்பது தான் எங்களது பணியாக இருந்தது என ஆப்பிள் நிறுவனத்திற்காக பணியாற்றிய ஒரு நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரம் தற்போது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அந்த முன்னாள் பணியாளர், “குளோப்டெக் என்ற நிறுவனத்தில் பணியாற்றியபோது சிரி மென்பொருளின் செயல்பாடு குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம். சிரி சரியாக செயல்படுகிறதா எனக் கண்காணிக்க ஒவ்வொரு பணியாளரும் ஒரு நாளைக்கு 1000 சிரி ஒலிப்பதிவுகளைக் கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் பயனாளர்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என உறுதியளித்துள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அந்நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆப்பிள் தரப்பு, “சிரியில் சேமிக்கப்படும் குறைந்த அளவிலான தகவல்கள், சிரியை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். சிரியில் சேகரிக்கப்படும் தகவல்கள் ஆப்பிள் சர்வருக்கு அனுப்பப்படும். ஆனால், அதனை மனிதர்கள் ஆய்வு செய்யமாட்டார்கள்” என விளக்கமளித்துள்ளது.

IPHONE, SIRI, AUDIO, RECORDINGS, CONTROVERSY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்