இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!- ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் நீக்கம்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இந்திய ஐடி ஊழியர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் அமெரிக்க அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹெச்1பி விசா நடைமுறையில் ஒரு முக்கியமான கட்டுப்பாட்டை நீக்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

ஹெச்1பி விசா மூலம் சர்வதேச அளவில் அதிகம் பயன் அடைந்தவர்கள் நம் இந்தியர்களாகத் தான் இருப்பர். இன்றும் பல இந்திய டெக் பணியாளர்களுக்கு ஹெச்1பி விசா மூலமான அமெரிக்க வேலை என்பது முக்கிய லட்சியங்களுள் ஒன்றாகவே இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஆக ஜோ பைடன் பதவி ஏற்றத்தில் இருந்து முந்தைய ட்ரம்ப் அரசாங்கம் கொண்டு வந்த பல நடைமுறைகளும் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் ஹெச்1பி விசா நடைமுறைகளிலும் பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர உள்ளது அமெரிக்க அரசு. இப்படி புதிதாக அறிமுகப்படுத்தப்பட நடைமுறையில் ஹெச்1பி விசாவில் தேர்வு செய்யும் பணியில் உள்ள லாட்டரி முறையை முற்றிலுமாக நீக்கிவிட்டு பதவி மற்றும் சம்பளம் அடிப்படையில் ஹெச்1பி விசா வழங்கப்பட வேண்டும் என்ற விதியை அறிமுகம் செய்துள்ளது.

இதுபோக, ஹெச்1பி விசா காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாக குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஹெச்1பி விசா மூலம் பல வெளிநாட்டவர்களை குறைவான சம்பளத்துக்குப் பணியமர்த்தி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை என நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வரிச்சலுகை மட்டுமல்லாது குறைவான சம்பளத்தில் பணியாளர்களை அமர்த்துவது போன்ற செயல்களிலும் பெரும் நிறுவனங்கள் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மசோதா விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், ஹெச்1பி விசா வழங்கப்படுவதற்கான ஆண்டு வருமாணம் அளவீட்டை ஒரு அமெரிக்கரின் வருமான அளவை வைத்து நிர்ணயம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

H1B, H1B VISA, IT EMPLOYEES, INDIAN IT EMPLOYEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்