Xiaomi முதல் OnePlus வரையில்… 40% தள்ளுபடி உடன் அமேசான் போன் திருவிழா..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

அமேசான் போன் விற்பனை திருவிழா நவம்பர் 24-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. Xiaomi, சாம்சங், ஒன்ப்ளஸ் உட்பட பல ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Xiaomi முதல் OnePlus வரையில்… 40% தள்ளுபடி உடன் அமேசான் போன் திருவிழா..!
Advertising
>
Advertising

அமேசான் ஸ்மார்ட்போன் விற்பனைத் திருவிழாவில் போன் வாங்குபவர்களுக்கு 40% வரையிலான தள்ளுபடி உடன், வட்டியில்லா தவணை முறை, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியனவும் வழங்கப்படுகின்றன. இதுபோக, குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களுக்கு SBI க்ரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் கொடுத்த தள்ளுபடியில் இருந்து கூடுதல் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Fab Top Phone Fest started with amazing discounts

Xiaomi 11 Lite NE 5G ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 26,999 ரூபாய்க்கு விலைக்கு வந்துள்ளது. ஆனால், அமேசான் சேலில் எஸ்பிஐ ஆஃபர் உட்பட அனைத்து ஆஃபர்களையும் சேர்த்தால் 19,999 ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம். இந்த போன் 6.55 இன்ச் முழு ஹெச்டி தெளிவுடன் ஆன ஸ்கிரீன், 64 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமிரா கொண்டுள்ளது.

சிறந்த பட்ஜெட் போன் வேண்டும் என்றால் SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு தள்ளுபடியை சேர்த்து Samsung Galaxy M12 ஸ்மார்ட்போனை 10,349 ரூபாய்க்கு வாங்கலாம். 6,000mAh திறன் கொண்ட பேட்டரி, 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே ஸ்கிரீன், 48 மெகாபிக்சல் கொண்ட கேமிரா என அசத்தலான அடிப்படை வச்திகள் இந்த போனில் உள்ளன.

ஒன்ப்ளஸ் ரக ஸ்மார்ட்போன்கள் வாங்க நினைப்பவர்களுக்கு OnePlus 9 Pro ஸ்மார்ட்போன் நல்ல தள்ளுபடி விலையில் அமேசான் போன் திருவிழாவில் வாங்க முடியும். ஒன்ப்ளஸ் வாங்க நினைப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி கணக்கை பயன்படுத்தினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

SMARTPHONE, AMAZON SALE, SMARTPHONE OFFERS, BUDGET SMARTPHONES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்