இனி ‘சிக்னல்’ இல்லாமலும் ‘போன்’ பேசலாம்... ‘அசத்தல்’ வசதியை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம்...
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஏர்டெல் நிறுவனம் சிக்னல் இல்லாமலும் போன் பேச உதவும் Wifi Calling என்ற அசத்தல் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதற்காக அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் Wifi Calling என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த வசதி மூலமாக போன் நெட்வொர்க் இல்லாமல் Wifi உதவியுடனேயே வாடிக்கையாளர்கள் ஒருவருடைய செல்போன் என்ணிற்கு அழைத்துப் பேச முடியும். இந்த வசதியை ஐபோன் 6s மற்றும் அதன்பின் வந்த அனைத்து ஐபோன்களிலும் உபயோகிக்க முடியும். மேலும் இந்த வசதியை ரெட்மி K20, ரெட்மி K20 ப்ரோ, போகோ F1, சாம்சங் J6, சாம்சங் A10s, சாம்சங் On6, சாம்சங் M30s, ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7T, ஒன்ப்ளஸ் 7T ப்ரோ ஆகிய போன்களிலும் பயன்படுத்த முடியும்.
இந்த போன்களில் லேட்டஸ்ட் ஓ.எஸ் அப்டேட் செய்தபின், போன் செட்டிங்ஸில் சென்று இந்த வசதியை ஆக்டிவேட் செய்தால் போதும். இந்த வசதியைப் பயன்படுத்தும்போது VoLTE வசதியையும் ஆன் செய்து வைத்துக்கொண்டால் Wifi-ல் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அழைப்பு மீண்டும் 4G-யுடன் தானாகவே கனெக்ட் ஆகிக்கொள்ளும்.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் மூலம் மட்டுமே தற்போது வேலை செய்யும் இந்த வசதியை விரைவில் அனைத்து Wifi கொண்டும் பயன்படுத்தமுடியும். தற்போது டெல்லி NCR டெலிகாம் வட்டத்தில் மட்டும் கிடைக்கும் இந்த வசதி விரைவில் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோவும் இந்த வசதியை விரைவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சத்தமில்லாமல் 'பிரபல' திட்டத்தை நீக்கிய ஜியோ... மறுபடியும் மொதல்ல இருந்தா?... 'கதறும்' வாடிக்கையாளர்கள்!
- இந்தியாவுல 'யாருக்கு' வேணாலும் பேசுங்க.. வாய்ஸ் 'கால்கள்' முற்றிலும் FREE.. அடுத்தடுத்து 'அறிவித்த' நிறுவனங்கள்!
- ‘கடைய இழுத்து மூட வேண்டியதுதான்’... ‘வேற வழி தெரியல’... ‘பிரபல நிறுவனம் வேதனை’!
- நஷ்டம்,நஷ்டம்னு சொல்லிட்டு.. லாபத்தில்.. ஜியோ, வோடபோனை.. பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல்!
- 'கட்டணங்களை உயர்த்தி'... ‘புதிய ப்ரீபெய்டு பிளான்களை’... ‘அறிவித்த பிரபல நிறுவனங்கள்'... 'இன்று நள்ளிரவு முதல் அமல்’!
- வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து வரவுள்ள ‘3 அசத்தலான வசதிகள்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- ‘கஸ்டமர் தான் முக்கியம்’... 'ஆல் இன் ஒன் திட்டத்தில் அதிரடி சலுகை வழங்கும் ஜியோ'!
- ‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..
- ‘அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்’.. ‘ரொம்ப மலிவான விலையில்’.. அசர வைத்த ஜியோவின் புது அறிவிப்பு..!
- 'ஐயுசி' கட்டணம்.. இன்னும் '2 ஆண்டுகளுக்கு' தொடரும்.. வாடிக்கையாளர்கள் 'கடும்' அதிர்ச்சி!