2 நாள் தான்...! ஜியோ வாடிக்கையாளர்களே...! - பர்சை பதம்பார்க்க போகும் ரீசார்ஜ் கட்டணங்கள்.

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஏர்டெல்லில் ஆரம்பித்த ரீசார்ஜ் கட்டண உயர்வு தற்போது ஜியோவில் முடிந்துள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்களில் முதன்மையானது ஏர்டெல் மற்றும் ஜியோ. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்ட் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக சொல்லியிருந்தது.

அதன்படி, தங்களின் ப்ரீபெய்ட் பிளான்களின் கட்டண சேவையை சுமார் 20% உயர்த்தியது. அப்போது வோடஃபோன் ஐடியா, ஜியோ யூசர்கள் எங்களுக்கு கட்டண உயர்வு இல்லையே என ஆட்டம் ஆடி கொண்டிருந்த நிலையில் ஏர்டெல் கட்டண உயர்வை அறிவித்த இரு நாட்களில் வோடஃபோன் ஐடியா, நிறுவனம் தங்களின் கட்டண உயர்வை வெளியிட்டது.

என்னடா இது அம்பானியின் ஜியோ மட்டும் இன்னும் எந்த அறிவிப்பையும் அளிக்காமல் இருக்கின்றாரே என எண்ணிய நிலையில், ஜியோ நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை 20 முதல் 21 சதவீதம் வரை உயர்த்த போவதாக நேற்று இரவு அறிவித்தது. இந்த அதிகரிக்கப்பட்ட கட்டண உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு வோடஃபோன், ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது கட்டண உயர்வு குறைவுதான் என கூறப்படுகிறது.

இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'தற்போதைய டிஜிட்டல் வாழ்க்கையில் ஒவ்வொரு இந்தியரின் தொலைத்தொடர்பு சேவையை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதற்காக ஜியோ புதிய அன்-லிமிடட் பிளானை அறிமுகப்படுத்துகிறது.

நாங்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் தொலைத்தொடர்பு துறையில் சிறந்ததாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான தொலைத் தொடர்பு வசதியை உலகிலேயே ஜியோ மட்டுமே வழங்குகிறது' என குறிப்பிட்டுள்ளனர்.

ஜியோ நிறுவனத்தின் புதிய கட்டண விவரப்படி முன்பு இருந்த ரூ.75க்கு 28நாட்கள் இருந்த பிளான் கட்டணம் ரூ.91-ஆக உயர்ந்துள்ளது. 20 நாட்களுக்கு ரூ.129ஆக இருந்த பிளான் 155 ரூபாயாகவும், 24 நாட்களுக்கு ரூ149 ஆக இருந்த பிளான் 179 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 84 நாட்களுக்கு ரூ.599யாக இருந்த பிளான் தற்போது ரூ.719ஆக மாறியுள்ளது.

அதோடு, ஒரு வருடத்திற்கு (336 நாட்கள்) ரூ.1,299 யாக இருந்த கட்டணம் ரூ.1559, ரூபாயாகவும்,  365 நாட்களுக்கு இருந்த ரூ.2,399 கட்டணம் ரூ.2,879-ஆக உயர்ந்துள்ளது.

AIRTEL, VODAFONE, JIO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்