84 நாட்கள் வேலிடிட்டி, 'கேஷ்பேக்' ஆபர், 6 ஜிபி டேட்டா... 'வரம்பற்ற' குரல் அழைப்புகளுடன்... புதிய திட்டங்களை 'அறிமுகம்' செய்த நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

84 நாட்கள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை, ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஜியோவுக்கு டப் கொடுக்கும் வகையில், பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்த புத்தாண்டினை குதூகலிக்க செய்யும் வகையில் 279 மற்றும் 379 விலையில் இரண்டு திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது.

அதன்படி 279 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. 279 ரூபாய் திட்டத்தில் ஹெச்.டி.எப்.சி லைஃபில் இருந்து ரூபாய் 4 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடையும் வழங்குகிறது.

இதுவே நீங்கள் 379 ரூபாய் திட்டத்தை தேர்வு செய்தால் 6 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 900 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் ஷா அகாடமி, விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயன்பாடுகளையும் நான்கு வாரங்களுக்கு வழங்குகிறது. இதுதவிர பாஸ்டேக் சலுகைக்கு ரூபாய் 100 கேஷ்பேக் வசதியினை, இந்த இரு திட்டங்களும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்