எத்தனை நாள் தான் மனுஷங்க ரெடி பண்ற 'பீட்சாவ' சாப்பிடுறது...? - ஸ்பேஸ்-X நிறுவனத்தின் 'வேற லெவல்' திட்டம்...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஸ்பேஸ்-X நிறுவனத்தின் பொறியாளர்களாக பணியாற்றிய இருவர் 45 நொடிகளில் 'பீட்சா' தயாரிக்கும் ரோபோ ஒன்றை களமிறக்க உள்ளனர்.

Advertising
>
Advertising

எப்போதும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-X நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்கை பற்றித்தான் செய்திகள் வந்துகொண்டிருக்கும்.  இப்போது முதன்முறையாக எலான் மஸ்கின் 'ஸ்பேஸ்X' நிறுவனத்தில் பொறியாளர்களை குறித்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு காரணம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பீட்சா. பீட்சா பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன? அதுவும் பீட்சா முன்பை விட மிக சீக்கிரமாக கிடைக்கும் என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி தானே. அதுவும் தற்போதெல்லாம் இந்தியா உட்பட உலக நாடுகளில் வீட்டில் சமைப்பதே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. வீட்டின் அனைவரும் உணவகங்களில் குவிவது வழக்கம். இது ஒருபக்கம் என்றால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் புக் செய்து வரவழைத்து உண்பவர்கள் இன்னும் அதிகம்.

இந்த நிலையில், ஸ்பேஸ்X நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர்களான பென்சன் சாய், பிரையன் லாங்கோன் மற்றும் ஜேம்ஸ் வஹாவிசன் ஆகியோர் 45 நொடிகளில் ‘பீட்சா’ தயாரிக்கும் ரோபோவை களம் இறக்கவுள்ளனர்.

இந்த ரோபோ அடுத்த ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 'ஸ்டெல்லர் பீட்சா' என்ற பெயரில் ரோபோ எந்திரங்கள் தயாரிக்கும் பீட்சா டெலிவரி செய்யப்படும் என மூவரும் தெரிவித்துள்ளனர்.

இந்த ரோபோவின் வேலை என்னவென்றால் பீட்சாவை தயாரிப்பது, பேக் (Bake) செய்வது மற்றும் டாப்பிங்க் (Topping) செய்ய என அனைத்தையும் ரோபோ செய்யும் என மூவரும் தெரிவித்துள்ளனர். மலிவான விலையில், துரிதமாக பீட்சாவை வழங்குவதுதான் தங்களது நோக்கம் என மூவரும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் ஸ்பேஸ்X நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களில் மொத்தம் 23 பேர் இந்த ஸ்டெல்லர் பீட்சாவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. வரும் 2022ஆம் ஆண்டு முதல் ஸ்டெல்லர் பீட்சா, டிரக் மூலம் பீட்சா விரும்பிகளின் இருப்பிடத்திற்கு தேடி சென்று பீட்சா தயாரித்து, டெலிவரி செய்யுமாம்.

இந்த ரோபோ அதிவிரைவாக 45 நொடிகளுக்கு ஒருமுறை ஒரு பீட்சா என பீட்சாவை தயாரித்து கொடுக்கும் எனவும் கூறியுள்ளனர்.

PIZZA, SPACE-X, ROBOT, பீட்சா, ரோபோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்