வொர்க் ஃப்ரம் ஹோம் பயன்பாட்டுக்காக ‘269 லட்சம் பேர்!’.. டவுன்லோடு செய்த ஆப் எது தெரியுமா?’

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகள் இதனால் முடக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணிபுரிய சொல்லி அறிவுறுத்தியும் அனுமதி கொடுத்துமுள்ளனர்.

ஆனால் வீட்டிலிருந்து அலுவலகப் பணியை செய்வது என்பது சற்று சவாலானதாகவும் வழக்கமான அலுவலக பணிகளுக்கு நேர் எதிரானதும் கூட. முக்கிய ஆவணங்களை பரிமாறிக்கொள்வதில் தொடங்கி சக ஊழியர்களையும் மேலதிகாரிகளையும் தொடர்பு கொள்வது வரை சின்னஞ் சிறு சிக்கல்கள் அதிகமே இருக்கச் செய்கின்றன.  இந்த சூழலில் ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு சிறப்பாக பணி செய்வதற்காக அவர்கள் நம்புவது வீடியோ கான்ஃபரன்சிங் செயலிகளைத்தான்.

ஆனால் இதுபோன்று வீடியோ கான்ஃபரன்சிங் செயலிகளுக்கு தெளிவான காணொளி அமைப்பு உள்ள கணினி அல்லது செல்போன், குழப்பமில்லாத வாய்ஸ், பயன்பாட்டு நேரம், இணையத்தின் வேகம் உள்ளிட்ட பல அம்சங்களின் கவனிக்க வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் பட்டியலில் ஜூம், ஸ்கைப் மற்றும் ஹவுஸ் பார்ட்டி என்கிற மூன்று செயலிகளில் முன்னிலையில் இருப்பதாக ப்ரியோரி என்கிற ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 27 கோடிமுறை இந்த செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.  இந்த மூன்று செயலிகளிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது ஜூம் என்கிற செயலி. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்த செயலியை  2 கோடியே 69 லட்சம் பேர் இந்த செயலியை தரவிறக்கம் செய்துள்ளதாக இந்த ஆய்வுத் தரவுகள் குறிப்பிடுகின்றன.  காரணம் இந்த செயலி மூலம் வீடியோ அழைப்பிலும் அல்லது வாய்ஸ் மூலமோ எளிதாக தொடர்பு கொள்ளவும், வீடியோ மீட்டிங்குகளை ரெக்கார்டு செய்து கொள்ளவும், ஒரு பணியாளர் தனது ஸ்கிரீனை மற்ற பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்றும், இந்த செயலியில் 40 நிமிடங்கள் வரை வீடியோ மீட்டிங் நடத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த செயலியை பலரும் பயன்படுத்தி தொடங்கியுள்ளதாக மேற்கண்ட ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

APP, ZOOM, WORKFROMHOME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்