ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்-ன் புதிய பிரீமியம் திட்டம்.. ஒரே சந்தா கட்டி 15 பிரபல OTT தளங்களை பார்க்கலாம்

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

பாரதி ஏர்டெல் நிறுவனம் தங்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சேவை பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சிக்கர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

1300 ஆண்டுகளாக இயங்கும் உலகின் பழமையான ஹோட்டல்.. 52 தலைமுறைகளால் நடத்தப்பட்டு வருகிறது.. எங்கு தெரியுமா?

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர் பயன்படுத்தி வரும் டெலிகாம் ஆபரேட்டரான பார்தி ஏர்டெல், புதிய ஒருங்கிணைந்த சந்தா திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 15 பிரபலமான வீடியோ ஓடிடி தளங்களின் அணுகலை மாத சந்தா செலுத்தி பெற முடியும்.

15 ஓடிடி தளங்கள்:

புதிய சந்தா திட்டமான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் (airtel xstream premium subscription) மாதத்திற்கு ரூ.149 செலுத்தி ஓடிடி தளங்களை சந்தாதாரர்கள் அனுபவிக்க முடியும். அவை வருடத்திற்கு ரூ.1,499 செலுத்தி ஒரு வருடத்திற்கான 15 ஓடிடி தளங்களின் அணுகலைப் பெறலாம்.

20 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பெற முடியும்:

இந்த அறிவிப்பு குறித்த ஏர்டெல் டிஜிட்டல் தளத்தின் தலைமை செயல் அலுவலர் ஆதர்ஷ் நாயர் அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார் அதில், 'இந்த கட்டண சேவை மூலம் 20 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பெற முடியும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும், அதிகம் சந்தாதாரர்களைக் கொண்ட 15 ஓடிடி தளங்கள் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுவும் மலிவு விலையில்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்னெல்லாம் தளங்கள்:

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சேவையில் கிடைக்கும் 15 ஓடிடி தளங்கள் pinvarumaru:
'சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் ப்ளே (Lionsgate Play), ஈரோஸ் நவ் (Eros Now), மனோரமாமேக்ஸ் (ManoramaMax), ஹோய்சோய் (Hoichoi), அல்ட்ரா (Ultra), எபிக் ஆன் (Epic On), ஷார்ட்ஸ்டிவி (ShortsTV), க்லிக்க் (KLIKK), டிவோ (Divo), டோலிவுட் ப்ளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), டாக்குபே (Docubay), ஷெமரூமீ (ShemarooMe), ஹங்காமா ப்ளே (Hungama Play)' ஆகியவற்றை பயனர்கள் கண்டு மகிழலாம்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சேவையில், வாடிக்கையாளர்கள் ஒரே பயன்பாட்டில் 15 இந்திய மற்றும் உலகளாவிய ஓடிடி தளங்களை அனுபவிக்க முடியும் என அந்நிறுவனம் பெருமிததோடு கூறி வருகிறது.

அதுமட்டுமில்லாமல், மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டளவில், இந்தியாவின் ஓடிடி (OTT) சந்தா சந்தை தற்போதைய 500 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் இருந்து பில்லியம் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் வரும் காலங்களின் அதிகளவில் இருக்கும்.

எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.. இப்போ எங்களுக்கு ஒரே 'ஆசை' தான்.. காதலர் தினத்தில் இணையும் திருநங்கை - திருநம்பி ஜோடி

PLATFORMS, AIRTEL EXTREME PREMIUM SERVICE, பிரீமியம் திட்டம், பாரதி ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம்

மற்ற செய்திகள்