‘இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம்’.. அரசு இதை செய்ய மாட்டாங்கன்னு நம்புறேன்.. Zoho CEO ஸ்ரீதர் வேம்பு முக்கிய கோரிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மத்திய, மாநில அரசுகளுக்கு ஊரடங்கு குறித்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் நாளுக்க நாள் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜோகோ (Zoho) மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அதில், ‘கடந்த மார்ச் 2020-ம் ஆண்டு நான் எனது ஊழியர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து Work From Home செய்ய அறிவுறுத்தி இருந்தேன். அன்று முதல் இன்று வரை 20-க்கும் அதிகமான கிராமப்புற அலுவலகங்களை துவங்கியுள்ளோம். அதனால் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கு விதிப்பதை தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் அது நமது ஏழை குடிமக்களை பெரிதும் பாதிக்கிறது.

இந்திய மக்கள் தொகையில் குறைவான மக்களே மாத சம்பளம் வாங்கும் நிலையில் உள்ளனர். இது டுவிட்டரில் உள்ள அனைத்து முகவர்களுக்கும் பொருந்தும். நமது மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்கள் அன்றாட வேலையின் மூலமே தங்களது தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். கோவிட் காலகட்டத்தில் நாங்கள் பல லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கியதன் வாயிலாக இந்த எதார்த்தத்தை உணர்ந்துள்ளோம்.

நாங்கள் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்வதால் வீட்டில் இருந்தே வேலை சூழல் கிடைத்துள்ளது. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் அவ்வாறு செய்ய இயலாது. ஊரடங்கு இத்தகைய தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கிறது. கிராமபுற குழந்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் அவர்களிடம் ஆன்லைன் வகுப்புகளுக்கான கணினிகளோ, இண்டர்நெட் வசதிகளோ கிடைக்கப் பெறாத சூழலில் உள்ளனர்.

கோடிக்கணக்கான தினசரி தொழிலாளர்களும், உற்பத்தி நிறுவனம் மற்றும் அதன் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பள்ளி குழந்தைகள், குறிப்பாக கிராமப்புற குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த பிரச்சனை அரசியலுக்கு அப்பாற்பட்டது’ என ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்