"கொரோனா விஷயத்துல இதை சாதிக்க உதவுன எல்லோருக்கும் நன்றி"…. பிரபல மருத்துவனை Dean நெகிழ்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகள் சம்மந்தமான தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

CSK vs RCB: 8 வருடத்துக்குப் பிறகு மிஸ் ஆகும் விஷயம்… ரசிகர்கள் சோகம்!

உலகையே நடுங்க வைத்த கொரோனா….

ஒட்டுமொத்த மனித குலத்தையே கொரோனா என்னும் பெருந்தொற்று அசைத்துப் பார்த்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹானில் உள்ள மக்கள் பட்ட கஷ்டங்களை  பார்த்து விக்கித்துப் போன உலகம், சுதாரிப்பதற்குள் கண்டங்களை தாண்டி உலக நடுகள் அனைத்துக்கும் பரவத் துவங்கியது கொரோனா. இந்த வைரஸ் தொற்றால் கொத்து கொத்தாக மக்கள் மரணித்தனர். உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் தொற்றை குறைக பொதுமுடக்கத்தை அறிவித்தனர். இதனால் கடந்த சில ஆண்டுகளில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறியது.

கொரோனா அலைகள்…

கொரோனா தொற்று இதுவரை 3 அலைகளாக உலக நாடுகளை புரட்டிப் போட்டது. தடுப்பூசி வந்த பிறகுதான் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. முதல் இரு அலைகளில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை விட மூன்றாவது அலையின் பாதிப்புக் குறைவதற்கு தடுப்பூசிகள் முக்கியக் காரணியாக அமைந்தன.

ராஜீவ்காந்தி மருத்துவமனை…

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தலைநகரான சென்னையைக் கடுமையாக பாதித்தது. முதல் இரண்டு அலைகளில் அதிகளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது பலருக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத சூழல் உருவானது. தலைநகரில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியது. இப்போது படிப்படியாக தொற்று எண்ணிக்கைக் குறைந்து வந்துள்ள நிலையில் முதல் முறையாக அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சி செய்தியை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜின் டீன் மருத்துவர் தேரணி ராஜன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மைல்கல் சாதனை…

அதில் ’முதல் தடவையாக நாங்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பூஜ்ய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை கொண்டுள்ளோம். இந்த மைல்கல்லை எட்ட உதவிய அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார். இந்த தகவல் பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

‘ஒரு சீனியர் ப்ளேயர் கிட்ட இப்படி நடந்துப்பீங்க’.. ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!

ZERO COVID PATIENT, RAGIV GANDHI HOSPITAL, CORONA, CHENNAI, ராஜீவ் காந்தி மருத்துவமனை, கொரோனா, சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்