'ஆடி R8 கார், 50 லட்சத்தில் சொகுசு வீடு'... 'அந்த பொண்ணு வாய்ஸ் என்னோடது '... 'ஆனா இத மட்டும் சொல்லமாட்டேன்'... தலை சுற்றவைக்கும் கிருத்திகாவின் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாகப் பேசி பெருமளவில் சொத்துகளைச் சேர்த்துள்ள பப்ஜி மதன் தேடப்பட்டுவரும் நிலையில், அவரது மனைவி அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் பலரும் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் இளம் தலைமுறையினர் சிலர் ஆன்லைன் கேமிற்கு மிகவும் அடிமையாகியுள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சாதாரணமாகச் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவோருக்கு மதன் என்றால் நிச்சயம் யாரெனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது சமூகவலைத்தளங்களில் இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என பலரையும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது மதன் விவகாரம்.

சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தான் யூடியூப் பயன்படுத்தி வருவதாகவும், அப்போது MADAN, TOXIC MADAN 18+, PUBG Madan Girl fan, Richie Gaming YT  போன்ற சேனல்களில் MADAN angry at his girtfriend, Strictly 18+, Tamil  PUBGM  போன்ற டைட்டில்களில் வீடியோக்களை பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

அந்த வீடியோக்களில் பெண்களை மிகவும் ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி மதன் என்பவர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட PUBG Game ஐ Online ல் விளையாடும்போது அதனை Stream செய்து விடுகிறார். அவருடைய வீடியோக்களை கேட்பவருக்குத் தொல்லை தரும் வகையிலும், எரிச்சல் ஊட்டும் வகையிலும், பெண்களின் அந்தரங்க விஷயத்தை குறிப்பிடும் வகையிலும் அந்த வீடியோகள் உள்ளது.

Madan சேனலை பெரும்பாலும் சிறுவயதில் உள்ளவர்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள். மிகவும் ஆபாசமான அருவருக்கத்தக்க வகையிலான இவருடைய பேச்சு Youtube Online-ல் தினமும் வெளியாகிறது. மேற்படி வீடியோக்களை பார்ப்பவர்களின் மனதில் பாலியல் வக்கிர நோக்கம் தோன்றும் வகையிலும், பாலுணர்வைத் தூண்டும் வகையிலும் அவருடைய பேச்சு உள்ளது.

எனவே அவரது சேனல்களை தடை செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க பப்ஜி மதன் மீது பல்வேறு புகார்கள் ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு வந்தது. 159 புகார்கள் மீது, தமிழகக் காவல்துறை அந்தந்த மாவட்ட சைபர் பிரிவு போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் வெளியே வந்த நிலையில், காவல்துறையினர் தன்னை தேடுகிறார்கள் என்பதை அறிந்த மதன், சென்னையை விட்டு ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் மதன் சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த வேங்கைவாசல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவது தெரிந்து சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்ற நிலையில், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டனர்.

பின்னர் மதனின் குடும்பம் சேலத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று, மதனின் மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் ஆகிய இருவரையும் சென்னைக்குக் கொண்டு வந்தனர். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து மதன் குறித்து விசாரணை நடத்தினர். பிறகு மதனின் மனைவி கிருத்திகாவைக் கைது செய்தனர். விசாரணையில் மதன் நடத்தும் யூட்யூப் சேனல்களுக்கு அட்மினாக கிருத்திகா இருந்து வந்ததாலும், வீடியோவில் வந்த ஆபாச பேச்சுக்களை இவரே பேசியதும் தெரியவந்தது.

மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதில், சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மதனும் கிருத்திகாவும் பொறியியல் பட்டதாரிகள். அரசால் தடைசெய்யப்பட்ட PUBG கேமை ஆன்லைனில் விளையாட அதற்காக யூடியூப் சேனல்கள் துவங்கி அதில் 8 லட்சம் பேர்களை Subscriber ஆக சேர்த்துள்ளனர். வீடியோக்களில் பெண்களின் அந்தரங்கம் குறித்து ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி இருவரும் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.

மதன் சென்னை வீட்டில் வைத்துத்தான் தனது யூ-ட்யூப் சேனலை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மதன், தான் நடத்தி வந்த யூட்யூப் சேனல்கள் மூலம் மாதம் ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சம் வரை பணம் சம்பாதித்ததும் தெரிய வந்துள்ளது. யூ-ட்யூப்பில் மதன் பேசும்போது அதற்குப் பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு கிருத்திகா பெண் வாய்ஸ் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

அவரது வீட்டிலிருந்து குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய செல்போன், டேப்லட், கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே மதன், கிருத்திகா காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் பல ஆண்டுகளாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தான் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது 8மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

மேலும் ஆபாச பேச்சு மூலம் சம்பாதித்த பணத்தில் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு 2 சொந்த வீடு, 2 சொகுசு கார்களையும் (ஆடி, பிஎம்டபிள்யூ) வாங்கியுள்ளதாக கிருத்திகா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தானும், மதனும் சேர்ந்து தான் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் கூறியுள்ள கிருத்திகா, மதன் எங்கே ஒளிந்திருக்கிறார் என்ற தகவலை மட்டும் கூறவில்லை. இதுகுறித்த எந்த கேள்விக்கும் கிருத்திகா முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சைபர்கிரைம் போலீசார் தெரிவித்தனர். 

மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், பாலியல் தொல்லையால் பாதிப்படைந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் தைரியமாக முன்வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அவர்களது பெயர் விவரங்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் எனச் சென்னை கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்