‘மதுரையை அதிரவைத்த சம்பவம்’.. மக்கள் நடமாடும் ‘பரபரப்பான’ சாலையில் நடந்த பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் பைக்கில் சென்ற நபரை வழிமறித்து இளைஞர்கள் சிலர் அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோலை அழுகுபுரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மாரியம்மன் தெப்பக்குளம் வடக்கு சாலை வழியாக பைக்கில் ஒரு பையுடன் சென்றுள்ளார். இவர் செல்வதை தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத இளைஞர்கள் பைக்கில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் தெப்புக்குளம் பகுதியில் பைக்கை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு ராஜா நின்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் திடீரென அரிவாளுடன் வந்து ராஜா வைத்திருந்த பையை பிடுங்க முயன்றுள்ளனர். பின்னர் அரிவாளால் ராஜாவை வெட்ட முயன்றுள்ளனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞர்களை தடுக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது வழிப்பறியா? அல்லது கொலைத் திட்டமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாடும் பரபரப்பான சாலையில் அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'நைட்'டோட நைட்டா வீட்ட மொத்தமா ஆட்டைய போட்றனும்..." 'திருடன்' போட்ட 'ஸ்கெட்ச்',,.. ஆனா அப்புறம் நடந்தது தான் 'ஹைலைட்டே'... 'திருட' போன வீட்டில் நடந்த 'காமெடி'!!!
- மாலை மருந்து வாங்கிய ‘மெடிக்கலில்’ நள்ளிரவு ‘கைவரிசை’.. போலீஸில் கையும் களவுமாக சிக்க வைத்த ‘சமூக இடைவெளி கட்டை’!
- VIDEO : "'கஸ்டமர்' மாதிரி சாதாரணமா தான் உள்ள வந்தாங்க.." 'சானிடைசர்' வெச்சு 'கை'ய 'க்ளீன்' பண்ண மறு செகண்ட்... நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!
- பிரேசில் நாட்டு பணத்துடன்... மதுரை பஜாரில் சிக்கிய நபர்!.. காவல்துறை போட்ட 'ஸ்கெட்ச்'... அடுத்தடுத்து 9 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'பேங்க் வரப்போலாம் அவர் கையில கட்டுக்கட்டா பணம் இருக்கும்...' 'ஏற்கனவே plan-ஐ கச்சிதமாக போட்ட பேங்க் மேனேஜர்...' - சிசிடிவியில் பார்த்து மிரண்டு போன போலீசார்...!
- இனிமேல் என் மனைவிய பார்த்துட்டே இருக்கலாம்ல...! 'பிரிவின் துயரம்...' - நெகிழ வைத்த காதல் கணவர்...!
- VIDEO : 'ஆன்லைன்' க்ளாஸ் நடந்துட்டு இருந்தப்போ,,.. "உன் 'பின்னாடி' யாரோ வராங்க",.. அதிர்ந்து போன 'மாணவி'... அடுத்தடுத்து நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!
- 'அழகான காலை.. அமைதியான சாலை'.. இமைக்கும் நொடியில் நிகழ்ந்த கோரம்.. உயிர் பலி.. படுகாயம்.. பொதுமக்களுக்கு நேர்ந்த கதி.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
- 'அபார்ட்மெண்ட்' பக்கத்துல 'ரத்த' வெள்ளத்தில் இறந்து கிடந்த 'செக்யூரிட்டி',,.. கார்ல வந்த அந்த 'பொண்ணு',,, 'சிசிடிவி'யில் தெரிய வந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!
- "உலகம் பூரா 'கொரோனா' பரவி கெடக்கு",,.. "'ஜல்லிக்கட்டு' நடத்த இது தான் பெஸ்ட் 'ஸ்பாட்'"..,, வைரலாகும் இளைஞரின் அனுமதி 'கடிதம்'!!!