'பசியில் தவித்த வாயில்லா ஜீவன்கள்...' 'பைக் சவுண்ட் கேட்டா போதும், எங்க இருந்தாலும் ஓடி வந்திடுவாங்க...' இளைஞர் செய்யும் நெகிழ்ச்சி காரியம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் வசிக்கும் கரூரை சேர்ந்த இளைஞர்,உணவின்றி தவிக்கும் 200 நாய்களுக்கு தினமும் உணவளிக்கும் செயலை சமூக வலைத்தளங்களில்  பலர் மனம் நெகிழ்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதால் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இதனால் வாயில்லா ஜீவன்கள் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உணவின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வரும் காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்ற  இளைஞர் அவர் வசிக்கும் சாலையில் இருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பதை தனது கடமையேன செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக ஏராளமான ஜீவன்கள் பசியால் தவிப்பதை உணர்ந்த மணிகண்டன் கடந்த 10 நாட்களாக அவரே தனது  வீட்டில் சமைத்து சாலைகளிலும், மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணவின்றி காணப்படும் நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

இவர் தன்னுடைய பைக்கில் தினமும் ஒரு பையில் பிஸ்கட், பெடிகிரி, பருப்பு சாதம் எடுத்து கொண்டு செல்கிறார். இவரின் பைக் சத்தத்தை கேட்டவுடன் உணவுக்காக காத்திருக்கும் நாய்கள் மகிழ்ச்சியுடன் மொத்தமாக ஓடிவந்து அவரை சூழ்ந்து கொள்கின்றன. மணிகண்டன் தினமும் சுமார் 200 நாய்களுக்கு உணவளிக்கிறார் என்பதும், சில காகங்களும் வந்து சாப்பிட்டுவிட்டு போவது வழக்கமான செயலாக உள்ளது.

இவரின் இந்த செயலை ஊக்கப்படுத்தும் விதமாக அவரின் நண்பர்களும், அவர் வசிக்கும் பகுதி மக்களும் தற்போது அரிசி, பிஸ்கட் என அவர்களால் முடிந்தவற்றை செய்வதால் தடை ஏதும் இன்றி ஏராளமான நாய்களுக்கு உணவு அளிக்க முடிகிறது என்று கூறுகிறார் மணிகண்டன்.

சமூகவலைத்தளங்களில் பரவி வரும் இவரின் இந்த செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

DOGS, MARINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்