'எல்லோருக்கும் வாழ்த்துக்கள்'... 'வீடியோ பதிவிட்டு இளைஞர் செய்த விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளைஞர் ஒருவர், வீடியோ பதிவில் தன் நண்பர்களை வாழ்த்திவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் - கலா தம்பதியினர். ரயில்வேயில் சந்திரசேகர் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு முரளி, பூவண்ணன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் முரளி என்பவர் தன் பெற்றோரிடம் சண்டையிட்டுக் கொண்டு ஜெ.ஜெ.நகரில் தனியாக வீடு எடுத்து தங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அதேப் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் முரளி நேற்று, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வாழ்த்தி பேசிவிட்டு, தான் சாமியிடம் செல்கிறேன் என்று  கூறி வீடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார். பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜெ.ஜெ. நகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர்.

அங்கு முரளியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ மூலமாக எல்லோருக்கும் வாழ்த்து அனுப்பிவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SUICIDE, YOUTH, CHENNAI, ICF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்