‘அரசுப் பேருந்தை வழிமறித்து’... ‘வைரலுக்காக’... ‘இளைஞர் செய்த காரியம்’... 'விபரீதத்தில் முடிந்த விளையாட்டு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபலமடைவதற்காக டிக் டாக் போன்ற செயலியில், சிலர் செய்யும் விஷயங்கள், விபரீதத்தில் முடிந்துள்ளன. அப்படி ஒரு சம்பவம் தான் இந்த இளைஞருக்கு வினையாக முடிந்துள்ளது.

கடலூர் , ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜீத்குமார். இவர் ஆபத்தை உணராமல், டிக் டாக் செயலியில் வைரலுக்காக, பல விஷயங்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆதனூர் பேருந்து நிறுத்தம் அருகே, அரசுப் பேருந்தை, இரு சக்கர வாகனத்தில் வழிமறித்து , பைக்கின் மீது படுத்துக்கொண்டு, 'என்னதான் நடக்கும்... நடக்கட்டுமே’ என்று டிக் டாக் செய்துள்ளார். இந்த டிக் டாக் செய்து பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நிலையில், இளைஞரை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் வைரலான நிலையில், இதை பார்த்து மற்ற இளைஞர்களும் இது போல செய்ய தொடங்கி விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கும்வகையில் இளைஞரை பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தன்னுடைய இரு சக்கரவாகனத்தில் டிக்டாக் செய்தபடியே, சுற்றிவந்த இளைஞர் அஜீத்தை, அவருடைய இருசக்கர வாகனத்துடன் போலீசார் பிடித்துச் சென்றனர்.  இவர் இதற்கு முன்பும் இதுபோல் விபரீத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிறுவன் முன்னிலையில் மின் விசிறியில் தூக்கிட்டு கொள்வதை போல டிக் டாக் செய்துள்ளார். இவரது குடும்பத்தினர் உதவியுடன், பச்சிளம் குழந்தையை பாயில் படுக்க வைத்து, அதற்கு  மேலே ஆபத்தை விளைவிக்கும் வகையில் கயிற்றில் தொங்கியபடி விபரீத டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து, அஜீத்குமார் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

TIK, TOK, VIDEO, VIRAL, YOUTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்