'இறந்தவருக்கு' பூ வீசுவதில் தகராறு... தூங்கிய வாலிபரை எழுப்பி... 'கொலையில்' முடிந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இறந்தவருக்கு பூ வீசுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த விஜயகுமார் என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பூ வீசுவது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவருக்கும் சரவணன்(21) என்னும் வாலிபருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து தூங்கி கொண்டிருந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் சதீஷ் இருவரையும் அழைத்து, ராமச்சந்திரன் தன்னுடைய நண்பர்கள் மாதவன், செந்தில் குமார், ரஞ்சித் ஆகியோருடன் இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் பேசியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை குத்தி இருக்கிறார்.
இதில் சரவணன் படுகாயமடைய அவரை அருகில் இருந்தவர்கள் எழுப்பி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர் சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுதொடர்பாக ராமச்சந்திரன், மாதவன், செந்தில் குமார், ரஞ்சித் ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அங்க எல்லாம் நான் ‘ரொம்ப’ பேமஸ்... அதான் ‘சென்னை’ வந்தேன்... இங்க இருக்க ‘பெண்கள்’ தான்... ‘அதிரவைத்த’ டிப்டாப் ஆசாமி...
- 'மாணவியின் தொடையை துளைத்த குண்டு'... 'மொத்தமா முடிச்சிடுங்க'... பெத்தவங்க செஞ்ச கொடூரம்!
- 3 செல்போன் வைத்து ‘ரகசிய வீடியோ’.. ‘நள்ளிரவு வீட்டுக்குள் கேட்ட சத்தம்’.. பகீர் கிளப்பிய சம்பவம்..!
- 'மருமகனுக்கு' ஏற்கேனவே ஒரு 'மனைவி'... 'ஆத்திரத்தில்' கத்திரிகோலால் மாமனார் செய்த 'காரியம்'... பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்'...
- ‘காயத்துடன் சாலையோரம் தவித்த முதியவர்’.. ‘அம்மா’வாக மாறிய காவலர்.. குவியும் பாராட்டுகள்..!
- லாரி ‘மோதியதில்’ மேம்பாலத் தடுப்பை ‘உடைத்துக்கொண்டு’... ‘50 அடி’ பள்ளத்திற்குள் ‘பாய்ந்த’ கார்... ‘காப்பாற்ற’ சென்றவர் உட்பட 3 பேருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...
- ‘காதலனுடன்’ சேர்ந்து ‘மிளகாய்ப் பொடி’ தூவி... ‘15 வயது’ மகள் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்... ‘காதலர்’ தினத்தன்று பெண் ‘காவலருக்கு’ நேர்ந்த கொடூரம்...
- ‘மினிஸ்டர கூட தெரிஞ்சு வெச்சுக்க மாட்டீங்களா?’.. ‘காவலருக்கு அமைச்சர் கொடுக்கச் சொன்ன தண்டனை!’.. வீடியோ!
- 'காதலர்' தினத்தன்று... கள்ளக்காதலனுடன் 'தனிமையில்' இருந்த மனைவி... தலைக்கேறிய 'ஆத்திரத்தில்' கணவர் எடுத்த விபரீத முடிவு!
- காதலுக்கு கடும் எதிர்ப்பு... 'திருமணத்துக்கு' முன் வீட்டைவிட்டு சென்று... காதல் ஜோடி எடுத்த 'விபரீத' முடிவு!