ஆசையா வாங்குன பைக்.. காலையில் எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. பொல்லாதவன் தனுஷ் போல களத்தில் இறங்கி இளைஞர் காட்டிய அதிரடி!!..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொல்லாதவன் படத்தில் வருவது போல, காணாமல் போன பைக்கை தானாக முன்வந்து கண்டுபிடிக்க நினைத்த இளைஞர் குறித்த செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

கல்லூரி மாணவரான சிவா என்பவருக்கு பைக் என்றால் அதிக பிரியம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் சமீபத்தில் விலை உயர்ந்த டியூக் பைக்கை வாங்கி பயன்படுத்தியும் வந்துள்ளார். அப்படி ஒரு சூழலில், ஒரு நாள் காலை கடும் அதிர்ச்சி ஒன்று சிவாவுக்கு காத்திருந்தது.

தனது வீட்டு முன்பு இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டியூக் பைக், மறுநாள் காலையில் காணாமல் போனதை அறிந்து அதிர்ந்து போனார் சிவா. தான் ஆசை ஆசையாக பார்த்து வாங்கிய பைக் காணாமல் போனதால் மனம் உடைந்த சிவா, எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்றும் தீவிரமாக முயற்சியில் இறங்கியுள்ளார்.

தொடர்ந்து தனது பைக்கின் புகைப்படத்தையும். பைக்கை கொள்ளையடித்து விட்டு போகும் சிசிடிவி காட்சி தொடர்பான வீடியோக்களையும் தனது நண்பர் வட்டாரத்தில் அனுப்பி வைத்துள்ளார் சிவா. சுமார் 30 நாட்களாக நகரின் அனைத்து வீதிகளிலும் தனது பைக்கை தேடி வந்த சிவாவுக்கு ஒரு நாள் அவரது நண்பரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. பெரம்பூர் பகுதியில் சிவாவின் பைக்கை பார்த்ததாக அந்த நணபர் தெரிவிக்க, உடனே அங்கு சென்ற சிவா, தனது பைக் வேறொரு நம்பர் பிளேட்டுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைக் கண்டதும் உடனடியாக  காவல் நிலையத்திற்கு சிவா தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வாகனங்களுடன் சிக்கிய பிரசாந்த் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இருச் சக்கர வாகனங்களை திருடும் நபர்களின் நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் கீழ் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதும் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில், இந்த கும்பலை சேர்ந்தவர்களையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அம்பத்தூர், மணலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பைக்குகளை திருடும் வாகன திருடர்கள் பைக் நம்பரை மாற்றி பயன்படுத்துவதும், பின்னர் விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.

சிவாவின் பைக் மட்டுமில்லாமல், இன்னும் சில விலை உயர்ந்த பைக்குகளையும் போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தனது பைக்கை கண்டுபிடிக்க துரிதமாக செயல்பட்ட இளைஞர் சிவாவை பலர் பாராட்டி வருகின்றனர்.

BIKE, CCTV, YOUTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்