‘கஷ்டப்பட்டு சேர்த்த பணம்’ ‘இனி யாருக்கும் இப்டி நடக்ககூடாது’.. பேங்க்முன் சென்னை இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் வங்கி ஊழியர் எனக் கூறி இளைஞரிடம் மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாத்ராஜ். இவர் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள தனியார் வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து ரூ.30,000 பணத்தை எடுத்துள்ளார். பின்னர் தனது வங்கி பாஸ் புக்கின் முகவரியை மாற்ற வேண்டும் என வங்கி மேலாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் உரிய இருப்பிடச் சான்று இல்லாமல் பாஸ் புக்கின் முகவரியை மாற்ற இயலாது என மேலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றத்துடன் சாத்ராஜ் வெளியே வந்துள்ளார். அப்போது அங்கே வந்த மர்ம நபர் சாத்ராஜிடம் தானும் ஒரு வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் பாஸ் புக்கின் முகவரியை மாற்றி தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். கனிவாக பேசியதாலும், டிப் டாப் உடை அணிந்திருந்தாலும் அவரை சாத்ராஜ் நம்பியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சாத்ராஜிடம் இருந்து 30,000 ரூபாயை வாங்கிக்கொண்டு 10 ரூபாய் ஸ்டாம்ப் வாங்கி வருமாறு அவரை அனுப்பியுள்ளார். சாத்ராஜ் போய் வருவதற்குள் அந்த நபர் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சாத்ராஜ் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் பறிபோய்விட்டது எனவும், இனிமேல் இதுபோல் யாருக்கும் நடக்ககூடாது என சாத்ராஜ் கூறியுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHENNAI, YOUTH, BANK, THEFT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்