‘யூ டர்ன் எடுத்த கார்’... ‘எதிரே வந்த பைக் மீது மோதியதில்’... 'இளைஞருக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, மதுக்கரை மரப்பாலம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மகன் ஜெகநாதன் (19), தனியாா் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாா். இவா் தனது உறவினா் மகளை, இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளாா். குவாரி அலுவலகம் அருகே வரும்போது, சாலையின் குறுக்கே, யூ டர்ன் செய்து மறுபுறம திரும்ப காா் ஒன்று வந்துள்ளது.

அப்போது ஜெகநாதன் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளாா். இதில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் காா் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெகநாதன், பின்னால் அமா்ந்து வந்த பள்ளி மாணவி ஜனனி (16) இருவரும் படுகாயமடைந்தனா். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்தவா்கள், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஜெகநாதன் உயிரிழந்தாா். மாணவி ஜனனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். காா் ஓட்டுநா் வெள்ளியங்கிரி மீது மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

COIMBATORE, ACCIDENT, DIED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்