“என்ன பண்றேனு பாருங்க!”.. போதை தலைக்கேறி, டிக்டாக்கிற்காக இளைஞர் செய்த வேலை... உயிரைப் பறித்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது 22 வயது மகன் வெற்றிவேல், கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவியும் சரண் என்கிற 2 வயது மகனும் இவருடன் வசித்துவந்த நிலையில், நேற்று முன்தினம் வெற்றிவேல், மது அருந்திவிட்டு, தனது நண்பர்கள் 2 பேருடன் ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது மீன் பிடித்துக்கொண்டே டிக்டாக் வீடியோ வெளியிட முயற்சித்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் லைக்கிற்காக மீனை உயிருடன் விழுங்கிய வெற்றிவேலின் சுவாசக் குழாயில் எதிர்பாராதவிதமாக மீன் சிக்கியதை அடுத்து, அவருக்கு மூச்சுத் திணறியதால், அவருடைய நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனை அடுத்து உயிரிழந்த வெற்றிவேலின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. வெற்றிவேல் மீனை விழுங்கினாரா அல்லது நண்பர்களுடன் டிக்டாக் செய்தபோது பந்தயத்துக்காக இப்படி செய்தாரா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்துக்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "சோடி போட்டுக்குவமா சோடி!".. சீனாவின் 'டிக்டாக்கிற்கு' மாற்றாக 'களமிறங்கும்' இந்தியாவின் 'புதிய ஆப்'!
- "முகத்தில் மாஸ்க் கட்டியதால் மூச்சுத்திணறிய பச்சிளம் குழந்தை!".. 'குடும்பமே' சேர்ந்து செய்த 'விபரீத' டிக்டாக்!
- தலைக்கேறிய டிக்-டாக் மோகம்!.. பெற்ற குழந்தைகளை விடுத்து... கள்ளக்காதலனை தேடி ஓடிய பெண்!.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
- "வயதானவரை கவனித்துவந்த பெண்!".. அந்த வீட்டிலேயே நகை, பொருட்களை திருடிவிட்டு செய்த ‘பலே’ வேலை!
- "அது என்னடா பாவம் பண்ணுச்சு!".. தன் மோகத்துக்கு பூனையைத் தூக்கிலிட்டு இளைஞர் செய்த.. நடுங்கவைக்கும் காரியம்!
- டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..!
- ட்விட்டர் டிரெண்டிங்கில் #BanTikTokInIndia.. திடீர்னு PlayStore-ல் மளமளவென குறைந்த டிக்டாக்-ன் ‘ரேட்டிங்’.. என்ன காரணம்..?
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!
- “வேட்டைக்காரன் பரம்பரைடா.. வேட்டையாட வாரேண்டா!”.. 'உடும்பை' வேட்டையாடிவிட்டு 'இளைஞர்கள்' பார்த்த 'வேலை'!
- “டிக்டாக் மோகத்தால் சிக்கிய இந்த இளைஞரை நியாபகம் இருக்கா?”.. ‘இப்பவும் டிக்டாக்கை விடல.. ஆனா’.. நெகிழவைத்த காவல் ஆய்வாளர்!