‘சொகுசாக வாழ ஆசைப்பட்டேன்’... ‘24 இளம் பெண்களை கடத்தி’... ‘வீடியோ எடுத்து’... ‘இளைஞரின் அதிர வைத்த வாக்குமூலம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் மற்றும் ஆந்திராவில், காவல் ஆய்வாளர் என்ற போர்வையில், 6 திருமணங்களை செய்த இளைஞர், ஏராளமான பெண்களை காரில் கடத்திச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வேலைக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், அமைந்தகரையில் அப்பெண் வேலைப் பார்த்துவந்த தனியார் நிறுவனத்தில், விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி என்பவர், இளம் பெண்ணை கடத்திச்சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், காணாமல் போன அப்பெண், திருப்பூர் நொச்சிப்பாளையத்தில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சுமார் ஒருவார காலத்திற்குப் பின்னர், இளம்பெண்ணை கடத்திய ராஜேஷ் பிரித்வியை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருப்பூர் நொச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரித்வி, 7- வகுப்பு மட்டுமே படித்துள்ளார். சொகுசாக வாழ ஆசைப்பட்டுள்ளார்.

சென்னை வந்த அவர், பல்வேறு பெயர்களில், பல்வேறு படிப்புகளை படித்துள்ளதாக கூறி, திருமண ஆசைக்காட்டி, சுமார் 24 பெண்களை தனது காதல் வலையில் விழவைத்து, அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து, அப்பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும், பல பெண்களிடம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், காவல் உதவி ஆய்வாளர் போர்வையில், தினேஷ், ஸ்ரீராமகுரு, தீனதயாளன் என பல்வேறு பெயர்களில், 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.

அவர் நடத்தி வந்த நிறுவனமும் போலியானது என்று கூறப்படுகிறது. பிரித்வி மீது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவரிடமிருந்து போலி உதவி ஆய்வாளர் அடையாள அட்டை, காவல்துறை சீருடை போன்றவற்றையும், போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், ராஜேஷ் பிரித்வியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  சிறையிலடைத்தனர்.

CHENNAI, TAMILNADU, ANDHRAPRADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்