சமாதானம் பேச போன பையன் இன்னும் வீடு திரும்பல.. அப்பா கொடுத்த பரபரப்பு புகார்.. நீர் ஓடையில் குவிந்த போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நண்பர்களுடன் ஏற்பட்ட முன்பகையால் சமாதானத்துக்கு சென்ற இளைஞர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கன்னியாகுமரி மாவட்டம் அயன்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா. இவர் அயன்கோடு ஊராட்சிமன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு லிபின் ராஜா (23 வயது) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, முதலாம் ஆண்டு சட்டம் பயின்று வந்துள்ளார். இவர்மீது அடிதடி வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், முன்விரோதத்தை சரிசெய்து சமாதானம் செய்துகொள்ள கடந்த 4-ம் தேதி லிபின்ராஜாவை அவரது நண்பர்கள் அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பி லிபின் ராஜா தனது பைக்கில் நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். அதன்பின்பு இரவு வெகுநேரம் ஆகியும் லிபின்ராஜா வீட்டுக்கு வரவில்லை. அதனால் செல்லப்பா தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மறுநாள் காலை நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது செல்போனை சோதனை செய்து இறுதியாக யாரெல்லாம் அவருடன் பேசியுள்ளனர் என்ற விவரத்தை போலீசார் எடுத்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் தேடுதலை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பழவூர் நான்கு வழிச்சாலை அருகிலுள்ள நீர்ஓடை மணலில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு எழுந்தது. அவர்கள் சந்தேகித்தது போல் அந்த பகுதியில் இருந்து உடல் அழுகிய துர்நாற்றமும் வீச துவங்கியது. இதனை அடுத்து தோண்டி உடலை  எடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டர். ஆனால் நீண்ட நேரமாக தோண்டு பணியில் போலீசார் தீவிரம் காட்ட வில்லை என செல்லப்பா குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், இறந்து நான்கு நாட்களாகி விட்டதால் சம்பவ இடத்தில் வைத்து 4 மருத்துவர்கள் முன்னிலையில்தான் உடற்கூறாய்வு செய்ய வேண்டும். ஆனால் நெல்லையில் இருந்து டாக்டர்கள் வேறு பணிக்கு சென்றுவிட்டதால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனால் நாளை காலை உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்படும் என கூறியுள்ளனர்.

YOUTH, KANYAKUMARI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்