'அப்ப எதுக்கு லவ் மட்டும் பண்ண?'.. திருமணத்துக்கு மறுத்த காதலி.. ஆத்திரத்தில் காதலன் கொடுத்த கொடூர தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ளது களமருதூர் மாரியம்மன் கோவில். இப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் சக்திவேல்.
சிதம்பரம் கீழவீதியில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் இவர் வேலை செய்து வந்த நிலையில், அதே கடையில் 18 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். இருவரும் காலப்போக்கில் காதல் புரிந்துள்ளனர். இவர்களின் காதலை அறிந்த அறிந்த கடை உரிமையாளர் இருவரையும், வேலையை விட்டு நிறுத்தியதை அடுத்து அந்த பெண் வீட்டிற்கு செல்லாமல், சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கினார்.
ஆனால் சக்திவேலோ தாம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அப்பெண்ணை சந்திப்பதற்காக சிதம்பரம் சென்ற சக்திவேல், அவரை பார்த்து பேசிக்கொண்டிருந்தபோது திருமணம் செய்துகொள்ளலாமா கேட்டுள்ளார். ஆனால் அப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அப்பெண்ணின் நெஞ்சிலும் கழுத்திலும் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து அவரை போலீஸார் தேடிப்பிடித்து கைது செய்தனர். படுகாயமுற்ற அப்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஹெட் ஆபீஸ்'ல இருந்து பேங்க் மேனேஜர் பேசுறேன் சார்'...'உங்க கார்டுல 16 நம்பர்'...இந்த குரல் நியாபகம் இருக்கா?
- ‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..
- 'இளம் பெண் மீது பலாத்கார முயற்சி'.. அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்தவர்களால், மேலும் நேர்ந்த கொடூரம்!
- 'விட்ருங்க.. ப்ளீஸ்!'.. காதல் பட பாணியில் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளம் ஜோடி.. வீடியோ!
- ‘பதைபதைக்க வைத்த ஆட்டோ ரேஸ்’... ‘நொடியில்’... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..
- 'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'இன்னும் ஒருவாரம்தான் இருக்கு’... 'திட்டம் தீட்டி இளைஞர் செய்த காரியம்’... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'!
- Video: நீ 'போடவே' வேணாம்.. பூசணிக்காய்களாக உடைந்து 'சிதறும்' ஹெல்மெட்கள்!
- ‘பெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..