“படிச்சது இன்ஜினியரிங்”.. “பார்ட் டைமாக பர்னிச்சர்.. முழு நேரமாக.. பேஸ்புக்கில் பார்த்த காமுக வேலை!”.. அதிர்ச்சி அடைந்த ‘பெண்ணின் கணவர்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரம் தெருவைச் சேர்ந்த 29 வயது வாலிபர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

இதில் அவரின் மனைவியின் படத்தை மட்டும் மார்பிங் செய்து தவறாக சித்தரித்து முகநூலின் ஒரு பக்கத்தில் சிலர் பதிவு செய்துள்ளனர். அந்த பக்கத்தின் அட்மினை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர் விபரத்தைக் கூறி அப்படத்தின் நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதனை நீக்கிய அந்த நபர் மற்றொரு முகநூல் பக்கத்தில் அதே படத்தை பதிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளிப்பதாக கூறிய போது எதிர்த் தரப்பினிரடமிருந்து கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்துள்ளது. மேலும் அந்த வாலிபரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பாவிட்டால் இன்னும் சில படங்கள் மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண்குமாரிடம் புகார் அளிக்க, அவர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் அந்த முகநூல் பக்கத்தை ஆய்வு செய்தனர், அதனடிப்படையில் மயிலாடுதுறை காமராஜர் சாலையை சேர்ந்த 28 வயதான சிவா என்பவரை தனிப்படை போலீசார் மூலம் பிடித்து விசாரித்தனர்.

அப்போதுதான் சிவா ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பதும், மயிலாடுதுறை பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது என்பதும், இப்படி முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக சித்தரித்து தனது போலியான முகநூல் பக்கத்தில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி சிவாவின் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். மேலும் இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் பிரத்தியேக செல்போன் எண்ணான 9489919722 என்கிற எண்ணில் புகார் செய்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் கொடுப்பவர்கள் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி வருண்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்