ப்பா.. காரைக்குடி இளைஞர் செய்த காரியத்த பாத்தீங்களா.. ரூ.20 கோடியாமே ! என்னன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை: காரைக்குடியில் 20 கோடி ரூபாய் மோசடி வழக்கில் பங்குச் சந்தை தரகரான எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியப் பங்குச்சந்தை மிக மிகப் பெரியதாகிவிட்டது. வர்த்தகம் பரவலாகிவிட்டது. பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது. பெரிய குழுமங்களின் பலங்களிலும் ஒன்றுக்கு ஒன்று பெரிய வேறுபாடுகள் இல்லை. மேலும் அவர்கள் சூழ்நிலைகள், தேவைகள் வேறுபட்டனவாக இருக்கின்றன. இந்த நிலையில், எம்பிஏ பட்டதாரி ஒருவர் பங்கு சந்தையில் லாபம் ஈட்டி தருவதாகக் கூறி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி டி.டி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சோம கணேசன் (35). பொறியியல் , எம்.பி.ஏ பட்டதாரியான இவர்; கேப் ஸ்டாக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தை தரகராக இருந்துள்ளார். இவர் உறவினர்கள் , படித்த நண்பர்களிடம் பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக அளவில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அவரது உறவினர்கள், நண்பர்கள் பணம், நகை பல்வேறு வகையில் 61 பேரிடம் 20 கோடிக்கு ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சோமகணேசன் தலைமறைவானார். இதற்கிடையில் தன்னிடம் வாங்கிய பணத்தை சோம கணேசன் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என காரைக்குடியைச் சேர்ந்த சரவணன் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சோமகணேசன் மனைவி வள்ளியம்மை தனது கணவரை காணவில்லை என கூறி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று சோமகணேசன் நீதிமன்றத்தில் ஆஜரானார். பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோமகணேசனை மோசடி வழக்கில் காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்து காரைக்குடி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என் மனைவிக்கு 'பாய் பிரண்ட்' தேவை.. வீடியோக்கள் போட்டு.. பெங்களூரு கணவன் செய்த 'WIFE SWAP'
- எங்கள பிரிச்சிடாதீங்க.. காரை விடாமல் துரத்திய பசு.. நெகிழ வைக்கும் பாசப்போராட்டம்
- முள் படுக்கையில் நாகராணி.. ஆக்ரோசமாக ஆடும் சாமியார்.. குவியும் பக்தர்கள்
- இரிடியம் பெயரில் 23 லட்ச ரூபாய் மோசடி.. தம்பிக்கே டிமிக்கி கொடுக்க நினைத்த அண்ணன்.. சிக்கியது எப்படி?
- 'வாமா வா, வந்து களத்துல இறங்கு'...'புதிய சக்தியாக மாறும் கிம் ஜாங் உன்னின் சகோதரி'... இனிமேல் ஆட்டம் உக்ரமா இருக்குமே!
- '45 ஆயிரம் பேருக்கு வேலை ரெடி...' 'ஒரு லட்சம் பேருக்கு டிரெயினிங் கொடுக்க போறோம்...' - பிரபல ஐடி நிறுவனத்தின் மலைக்க வைக்கும் அறிவிப்புகள்...!
- 'சோதனையிட வந்த அதிகாரி...' சானிடைசர் எடுத்து கையில ஊத்துன்ன அடுத்த நிமிஷமே...' 'ஷட்டர மூடி கடைய லாக் பண்ணிட்டு கிளம்பிட்டாரு...' - என்ன நடந்தது...?
- தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருச்சி டாக்டர் அ முஹமது ஹக்கீம் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்!
- 'எந்த வரனும் அமையல'... 'அந்த நேரம் பார்த்து மலர்ந்த காதல்'... 'காதலர்களை சூழ்ந்த எதிர்ப்பு'... சாதித்த காதல் ஜோடி!
- ‘ஒரு கரும்பு ரூ.35 ஆயிரத்துக்கு ஏலம்’!.. ஒரே மாதிரி ‘வெள்ளை’ சேலை கட்டி வந்த பெண்கள்.. வியக்க வைத்த காரணம்..!