'இரண்டு ஆண்டுகளாக தனது செல்போனில்...' சென்னை வாலிபர் செய்த காரியம் என்ன தெரியுமா..? அதிர்ச்சி தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறார் ஆபாசப் படத்தை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை நகர பெண்கள், குழந்தைகள், குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் காவல்துறையினர் சிறார் ஆபாசப்படங்கள் பார்க்கும் நபர்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதில் அம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பிஎஸ்சி பட்டதாரியான அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது செல்போனில் ஏராளமான சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் பார்த்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

CHENNAI, CHILDPORN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்