கடன் கொடுத்தவரின் 'கர்ப்பிணி' மனைவிக்கு... இளைஞரால் நிகழ்ந்த 'கொடூரம்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொடுத்த கடனை திருப்பி கேட்டவரின் மனைவியை வாலிபர் வயிற்றில் எட்டி உதைத்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

கடன் கொடுத்தவரின் 'கர்ப்பிணி' மனைவிக்கு... இளைஞரால் நிகழ்ந்த 'கொடூரம்'
Advertising
Advertising

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமமொன்றை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரபாகரன் (23).  இவர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வனித்குமார் என்பவரிடம் ரூ.20 ஆயிரம் பணம் கடனாக வாங்கி இருந்தார். நேற்று முன்தினம் பிரபாகரன் கல்வெட்டு கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

அப்போது வனித் குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் அங்கு வந்து கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வனித் குமாரின் கர்ப்பிணி மனைவியை பிரபாகரன் வயிற்றில் எட்டி உதைத்தார். இதில் வலிதாங்க முடியாமல் அவர் கீழே விழுந்து கதறினார். இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வனித் போலீசில் புகாரளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்